வாழைச்சேனை: மட்டக்களப்பு மத்தி கல்விவலயத்திலுள்ள வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலைய சாதாரனதர வகுப்பு மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலையில் பாடசாலையின் பிரதான நுளைவாயிலுக்கு முன்பாக பாடசாலையில் கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றும் ஏ.ஏ.எம்.நளீர் ஆசிரியருக்கு எதிராக வகுப்பு பாடங்களை பகிஷ்கரித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விடயம் சம்பந்தமாக நேரடியாக சென்று பார்வையிட்ட பொழுது, குறித்த பாடசாலையில் சாதாரன தரத்தில் கல்விகற்கும் மாணவனான ஏ.யு.எம்.இர்சாத் எனும் மாணவனை குறித்த ஆசிரியர் கடுமையாக தாக்கியதாகவும், மாணவனுடைய நண்பர்களக இருக்கின்ற சக மாணவர்களான பாசித், சியாம் ஆகியோரையும் தாக்கிய காரணத்தினாலே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாகவும், குறித்த ஆசிரியரை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இவ் ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், நூரிய்யா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று பாடசலைக்கு சமூகமளித்து குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பாடசாலை அதிபர் ஏ.யு.எம்.இஸ்மாயிலுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர். குறித்த ஆசிரியரை பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாகாத வார்த்தை பிரயோகங்களால் ஏசியதாகவும் அதனாலேயே ஆசிரியர் கோபமுற்று மாணவனை தாக்கியதாக கிடைக்கப்பெற்ற செய்தியினைப்பற்றி அதிபரிடம் கேட்ட பொழுது அது சம்பந்தமாக குறித்த ஆசிரியர் தன்னிடம் முறையிடவில்லை எனவும், மாணவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் எனக்கூறிய அதிபர் இஸ்மாயில், இது சம்பந்தமாக மட்டக்களப்பு கல்விவலயத்துக்கு அறிவித்தல் கொடுதுள்ளதாகவும் கூறினார்.
ஆனால் இன்று பாடசாலைக்கு சமூகமளித்திராத குறித்த ஆரியர் ஏ.ஏ.எம்.நளீரின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து இது சம்பந்தமாக வினவிய போது, குறித்த மாணவன் பாடசலையில் தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து அடிக்கடி ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் இது சம்பந்தமாக பலதடவைகள் அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் எந்த வித நடவடிக்கைகளையும் பாடசாலை குறித்த மாணவனுக்கெதிராக மேற்கொள்ளவில்லை எனவும், தான் மாணவனை கடுமையாக தாக்கியது என்பது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு எனக்கூறிய குறித்த ஆசிரியர், இது பாடசாலையில் உள்ள ஆசிரியர்களாலும், வெளிநபர்களாலும் தனக்கெதிராக திட்டமிட்டு மாணவர்களை சட்டத்துக்கு முறனான வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்படி தூண்டியுள்ளனர் எனத் தெரிவித்தார்.
Published by



Leave a comment