அப்துல் அஸீஸ் / பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு 13.03.2015 இன்று மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.
இந்நிகழ்வின் போது பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுபா சக்கரவர்த்தி, தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரணி அருள்வாணி சுதர்சன் ஆகியோர்கள் கருத்துரைகள் வழங்கினர்.
சிறப்பு பட்டிமன்றத்தினை மட்/புனித மிக்கல் கல்லூரி மாணவர்களும், வின்சன்ட் மகளிர் தேசியப் பாடசாலை மாணவிகளும் விவாதித்தனர். அத்துடன் தேவை நாடும் மகளிர் அமைப்பினரின் வில்லுப்பாட்டும் இடம்பெற்றது.
Published by



Leave a comment