- மர்சூக் அஹமட்லெப்பை
காத்தான்குடி: சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது இரண்டு தேசியபட்டியலில் ஒன்றை காத்தான்குடிக்கு வழங்க வேண்டும். சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட இடம் காத்தான்குடி. முஸ்லிம் காங்கிரஸ்ஸை உருவாக்கியது மாத்திரம் அல்ல அதன் ஆரம்ப வளர்ச்சிக்கும் மிகவும் பங்களிப்பை காத்தான்குடி செய்துள்ளது. 1989ம் ஆண்டு முதன் முதலாக முஸ்லிம் காங்கிரஸ் பங்கு பற்றிய பாராளுமன்ற தேர்தலிலே அதற்கு கிடைத்த மூன்று ஆசனங்களிலே காத்தான்குடியும் ஒன்று. இந்த மூன்று ஆசனங்களுக்கும் மேலதிகமாக தேசிய பட்டியல் ஆசனம் ஒன்றும் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைத்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்திலே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போதியளவு ஓட்டமாவடிக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்று கொடுத்திருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏறாவூருக்கு போதியளவு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்று கொடுத்திருக்கின்றது. எனவே இன்னும் பாக்கியாகவுள்ளது காத்தான்குடி மாத்திரமே.
காத்தான்குடிக்கும் தேசிய பட்டியல் வழங்குவதாக கட்சி தலைவர் றஊப் ஹக்கீமினால் பல தடவை கூறப்பட்ட போதிலும் இது வரை அது நிறைவேற்றப்படவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் தொடங்கிய காலத்திருந்து முஸ்லிம் காங்கிரஸ்ஸுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்து வருகின்றது. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு கணிசமான பங்களிப்பை காத்தான்குடி செய்து வந்திருக்கின்றது.
ஆனால் இம்முறை மட்டக்களப்பிலே முஸ்லிம் காங்கிரசுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்க காத்தான்குடி மக்கள் செய்த பங்களிப்பு மகத்தானது. அதாவது 15000 வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடியிலே பெற்றது. மொத்தம் மட்டக்களப்பு மாவட்டத்திலே 38000 வாக்குகளை பெற்றது.
ஆனால் தேர்தல் காலத்திலே அதிக பட்சம் 27000 இற்கும் 30000ற்கும் இடைப்பட்ட வாக்குகளைதான் முஸ்லிம் காங்கிரஸ் பெறும் என எதிர்பார்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத அளவு 38000 வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றது. ஏறாவூரிலும் ஓட்டமாவடியிலும் கிடைக்கும் வாக்குகளை ஓரளவு ஊகித்து இருந்தாலும் காத்தான்குடியில் இருந்து கிடைத்த வாக்குகள் ஊகித்த அளவை விடவும் அதிகமாக கிடைத்ததுதான் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஆச்சரியப்படும் அளவுக்கு 38000 ஆக வாக்கு வங்கி அதிகரித்ததற்கு காரணமாகும்.
தேர்தல் காலத்திலே தேசிய தலைவர் றஊப் ஹக்கீம் மட்டக்களப்பு முஸ்லிம் வாக்காளர்களை நோக்கி ‘இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழர் கூட்டமைப்பு பெறும் வாக்கிற்கு அடுத்தாக முஸ்லிம் காங்கிரஸ் பெறும் வாக்குகள் இருக்க வேண்டும்’ என அறை கூவல் விடுத்திருந்தார்.
அவர் கேட்டுக் கொண்டதன் படியே இம்மறை முஸ்லிம் காங்கிரஸ்ஸின் வாக்குகள் தமிழர் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளுக்கு அடுத்தாக இருந்தது. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாவது இடத்திற்கு வந்ததன் காரணம் எதிர்பாராத விதமாக காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ்சுக்கு கிடைத்த அபரிமிதமான வாக்குகள்தான். வாக்கு எண்ணும் நிலையத்தில் காத்தான்குடி வாக்கு பெட்டிகளை திறந்து கொட்டும் போது மரம் மரமாகவே வாக்குகள் இருந்தன. மரமா அல்லது காட்டு வனமா என்றிருந்தது.
இவ்வாறு காத்தன்குடியில் முஸ்லிம் காங்கிரஸ்ஸின் வாக்கு வங்கி அதிகரிப்பதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்ணணியின் பங்களிப்பையும் மறக்க முடியாது. இவர்கள் முஸ்லிம் காங்கிரஸ்ஸோடு இணைந்தது முஸ்லிம் காங்கிரஸ்சுக்கு புது இரத்தம் பாய்ச்சியதுபோல் இருந்தது. இம்முறை நல்லாட்சிக்கான தேசிய முன்ணணினர் தேர்தலை மிகவும் எழுச்சியாக செய்தார்கள். பிரமாண்டமான மகளிர் மாநாடு நடாத்தினார்கள்.

அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் அட்டாளச்சேனையானது மிக நீண்ட காலமாக முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து வரும் ஒரு கிராமமாகும். ஆனால் இதுவரை இவர்களுக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருந்து வருகின்றது. அட்டாளைச்சேனை மக்களும் நீண்ட காலமாக தேசிய பட்டிலை எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள்.
எனவே தேசிய பட்டியல் ஒன்றை அட்டாளச்சேனைக்கு வழங்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் தனது பிரதிநிதித்துவத்தை இழந்து விட்டதனால் திருகோணமலைக்கும் தேசிய பட்டியல் வழங்கப்பட வேண்டும். வன்னி மாவட்டத்தை பொறுத்தவரையும் முஸ்லிம் காங்கிரஸ் பங்கெடுத்த முதலாவது பாராளுமன்ற தேர்தலிலே 3 பாராளுமன்ற பிரதிநிதியிலே வன்னி மாவட்ட பிரதி நிதியும் ஒன்று. முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பத்திலிருந்து நேற்று வரை பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றிருந்த வன்னி மாவட்டம் துரதிஷ்டமாக இம்முறை பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது. எனவே வன்னி மாவட்டத்திற்கும் தேசிய பட்டியல் வழங்கப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் காத்தான்குடிக்கு இதுவரை தேசிய பட்டியல் வழங்கப்படவில்லை. எனவே காத்தான்குடிக்கும் தேசிய பட்டியல் வழங்கப்பட வேண்டும்.
மேற்சொன்ன அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இரண்டு தேசிய பட்டியலையும் 3 வருடங்கள் 3 வருடங்களாக பிரித்து வழங்குவதன் மூலம் 4 மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்தலாம். ஒரு தேசிய பட்டியலை காத்தான்குடிக்கும் அட்டாளச்சேனைக்கும் சமமான காலப்பகுதியாக பிரித்தும் மற்றைய தேசியப் பட்டியலை திருகோணமலைக்கும் வன்னிக்கும் சமமான காலப்பகுதியாக பிரித்தும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தேசியப்பட்டியலை வழங்கினால் மாத்திமே றஊப் ஹக்கீம் ஓரளவாவது நீதியாக நடந்துள்ளார் என முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் திருப்தியடைவார்கள்.
காத்தான்குடிக்கும் அட்டாளச்சேனைக்கும் வழங்க இருக்கும் தேசியப்பட்டியலில் முதல் மூன்று வருடங்களை காத்தான்குடிக்கு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் காத்தான்குடியிலே முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் எழுச்சியான நிலமையில் இருக்கின்றது. இந்த நேரத்தில் இந்த வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள அரசியல் அதிகாரம் வேண்டும். மேலும் நகர சபை தேர்தலை காத்தான்குடி எதிர்நோக்கியுள்ளது. நகரசபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதன் மூலம்தான் காத்தான்குடியிலே தனது காலை முஸ்லிம் காங்கிரஸ் பலமாக ஊன்ற முடியும்.
மேலும் ஹிஸ்புல்லாவுக்கு தற்போது தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கின்ற காலம் இது.
ஹிஸ்புல்லாவின் இந்த நிலமையானது காத்தான்குடியில் பலமடைந்த முஸ்லிம் காங்கிரஸின் நிலமையை பலவீனம் அடையவே செய்யும். எனவே காத்தான்குடிக்கு தேசிய பட்டியலை முதல் மூன்று வருடங்களுக்கு வழங்குவதுதான் சிறந்தது. ஏனெனில் நகரசபை தேர்தல் அண்மையில் வருகின்றது.
முதல் 03 வருடங்களுக்கு தேசிய பட்டியலை வழங்கும் போது முழு நம்பிக்கையானவர்களிடமே வழங்கப்பட வேண்டும். ஹிஸ்புல்லாவும் தனது பாராளுமன்ற பதவின் 02 வருட காலப் பகுதியை ஓட்டமாவடிக்கு வழங்குவேன் என்று கூறிவிட்டு பின்னர் வழங்காமல் விட்டதனால் கட்சி பல சங்கடங்களுக்குள்ளானது யாவரும் அறிந்த விடயமே. எனவே ஹிஸ்புல்லாவின் விடயத்தை ஒரு முன் அனுபவமாக றஊப் ஹக்கீம் கொண்டு மிகவும் நம்பிக்கையானவர்களுக்கு முதல் 03 வருடத்தையும் வழங்க வேண்டும். பிந்திய 03 வருடங்களையும் கொஞ்சம் நம்பிக்கை குறைந்தவர்களுக்கு வழங்கினாலும் பறவாயில்லை.
எனவே தேசியப் பட்டியலை காத்தான்குடியைச் சேர்ந்த எஞ்சினியர் அப்துர்ரஹ்மானுக்கோ அல்லது எஞ்சினியர் சிப்லி பாறுக்குக்கோ வழங்க வேண்டும்.
எனவே மேற்சொன்ன நடைமுறைகளை பின்பற்றி 04 மாவட்டங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ்ஸை பலப்படுத்தி முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப் படுத்த வேண்டும்.
Leave a comment