Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வு

    கொழும்பு: சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வையொட்டி இலங்கையை ஊழலற்ற நாடாக கட்டியெழுப்புவதற்கு அரசாங்க ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தும் நிகழ்வுகள் இன்று(09) அனைத்து அலுவலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு. சிவஞானஜோதியும் கலந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம்.

  • உமர் யூஸூபின் கல்விச் சேவை

    மெளலவி.MAM.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) கொழும்பு: அஷ்ஷெய்க்.யூஸுப் முப்தியின் புதல்வர் ‘சகோதரர். உமர் யூஸுப்’ கல்விக்கான ஒரு ஆக்கபூர்வமான பயணத்தை ஆரம்பித்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!!  “School with a Smile” எனும் மகிழ்வோடு பள்ளிக்குச் செல்லும் பாலர்களை, பாகுபாடின்றி உருவாக்கும் ஒரு உதவிக்கரமான நிகழ்ச்சித்திட்டமே அதுவாகும்.

  • ஃபத்வா சேவை

    மெளலவி.மஸ்ஊத் அஹ்மத் ஹாஷிமி கொழும்பு: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உலமாக்கள், முப்திமார்களைக்கொண்ட ‘பத்வா பிரிவின்’ ஓர் சிறந்த சேவையாக மக்களுக்கு மார்க்க விடயங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு உடன் ஃபத்வா பிரிவிலிருந்து நேரடியாக தெளிவைப் பெற்றுக்கொள்ளும் புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  • மடவளை மதீனா தேசிய பாடசாலையின் மைதானத்தினை அபிவிருத்தி செய்ய பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை!

    ஹாசிப் யாஸீன் மடவளை: மடவளை மதீனா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தினை அபிவிருத்தி செய்வதற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

  • “முஸ்லிம்களை தாக்குகின்ற விதத்தில் கருத்துப் பரிமாறல்கள் மேற்கொள்கின்ற கலாசாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்”

    ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: ஒரு சிறுபான்மை இனத்தினுடைய மத நம்பிக்கையிலே பெரும்பான்மையான சிறுபான்மை சமூகம் ஒன்று விமர்சிப்பதென்பது ஓர் அநாகரிகமான செயலாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நடைபெற்ற நிகழ்வொன்றி்ன் போது தெரிவித்தார்.

  • டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கும் சர்ச்சைக்குரிய பத்து முக்கிய கருத்துக்கள்

    கலிபோர்னியா: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

  • வயிற்றுவலி: கர்ப்பிணி என வைத்தியர் தெரிவிப்பு!

    அம்பாறை: வயிற்றுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற 14 வயது சிறுமி, 05 மாத கர்ப்பிணி என வைத்தியரினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அம்பாறையின் இங்கினியாகல பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு காரணமான நபரை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்ற வேளையில், குறித்த சந்தேகநபர் விசம் அருந்திய நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

  • முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் வருவதை தடுக்க வேண்டும் என்ற டிரம்ப் கருத்துக்கு கண்டனம்

    வோஷிங்டன்: முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக வர முயற்சிக்கும் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து, பல தரப்பிலிருந்தும் கண்டனங்களை ஈர்த்துள்ளது. அமெரிக்கா மீதான ஒரு வெறுப்புணர்வை பல முஸ்லிம்கள் பேணுவதாகவும், இந்த அச்சுறுத்தலுக்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறியும்வரை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

  • குவைத்தில் முதல் முறையாக “மரம் நடும் விழா”

    வாழ்வாதாரம் தரும் குவைத் மண்ணுக்கு நாம் வழங்கும் சிறு அன்பளிப்பு! அனைவரும் திரளாக வாருங்கள்! இணைந்தே மரம் நடுவோம்!! அழைப்பில் இன்புறும்…. குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

  • மதுவின் கோரத் தாண்டவம் : காரைதீவில் நால்வரின் நிலை கவலைக்கிடம்

    காரைதீவு: சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு கடற்கரை வீதியில் நேற்று 07ம் திகதி பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. காரைதீவு கடற்கரை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இரு உந்துருளிகள் (மோட்டார் சைக்கில்கள்) நேருக்கு நேர் மோதுண்டதால் மேற்படி விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

  • நதியாய் ஓடிய யூரோ நோட்டுக்கள்!

    வியன்னா: ஒஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருக்கும் தனூப் நதியில் ஒரு லட்சம் யூரோக்களுக்கும் அதிகமான கரன்ஸி நோட்டுகள் மிதந்து வந்தது குறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த கரன்ஸி நோட்டுக்கள் மிதந்துவந்ததைக் கண்ட ஒருவர் அதை எடுப்பதற்காக நதிக்குள் குதித்தார்.

  • காத்தான்குடி பதுரியா கிட்ஸ் கல்லூரியின் சுற்று மதில் திறப்பு விழாவும் வருடாந்த மாணவர்கள் வெளியேற்று விழாவும்

    ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பதுரியா கிட்ஸ் கல்லூரியின் சுற்று மதில் திறப்பு விழா மற்றும் வருடாந்த மாணவர்கள் வெளியேற்று விழா நிகழ்விற்கு கிழக்கு மாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இப்போது எங்கும் எல்லா மாணவர்களுக்கும் கல்வியிலே சம வாய்ப்பு கிடைப்பதால் எல்லோரும் படித்தவர்களாக மாறக்கூடிய சந்தர்ப்பம் நிறைய இருக்கிறது.

←Previous Page
1 … 274 275 276 277 278 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar