சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வு

corruption dayகொழும்பு: சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வையொட்டி இலங்கையை ஊழலற்ற நாடாக கட்டியெழுப்புவதற்கு அரசாங்க ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தும் நிகழ்வுகள் இன்று(09) அனைத்து அலுவலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு. சிவஞானஜோதியும் கலந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம்.

corruption day

இந்நிகழ்வின் போது தேசியக் கொடியேற்றல், தேசியக் கீதம் இசைத்தல், இராணுவ வீரர் உட்பட தேசத்திற்காக உயிர்நீத்த அனைவருக்கும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தல். ஊழலற்ற நாடாக கட்டியெலுப்புவதற்கு உறுதிமொழியெடுத்தல் என்பனவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

  • ஏ.எல்.எம்.தாஹிர்
    ஊடகப் பிரிவு,
    சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு

Published by

Leave a comment