காத்தான்குடி பதுரியா கிட்ஸ் கல்லூரியின் சுற்று மதில் திறப்பு விழாவும் வருடாந்த மாணவர்கள் வெளியேற்று விழாவும்

  • ஏ.எல். டீன்பைரூஸ்

shiblyகாத்தான்குடி: காத்தான்குடி பதுரியா கிட்ஸ் கல்லூரியின் சுற்று மதில் திறப்பு விழா மற்றும் வருடாந்த மாணவர்கள் வெளியேற்று விழா நிகழ்விற்கு கிழக்கு மாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இப்போது எங்கும் எல்லா மாணவர்களுக்கும் கல்வியிலே சம வாய்ப்பு கிடைப்பதால் எல்லோரும் படித்தவர்களாக மாறக்கூடிய சந்தர்ப்பம் நிறைய இருக்கிறது.

குறிப்பாக இந்த பதுரியா பாடசாலையில் இருந்து எத்தனையோ வைத்தியர்கள் பொறியியலாளர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

முன்னர் போல் அல்லாது இன்று நாம் கல்வியிலே அதிக கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். இங்கிருக்கின்ற இந்த குழந்தைகள் இன்னும் பல வருடங்களில் வைத்தியர்களாவோ பொறியியலாளர்களாகவோ இன்னும் வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவோ உருவாக இருக்கிறார்கள்.

shibly

இப் பாலர் பாடசாலைக்கு சுற்று மதிலினை அமைத்து தரவேண்டும் என இப் பாலர் பாடசாலையின் நிர்வாகசபை உறுப்பினர்கள் வேண்டிக் கொண்டார்கள் அதற்கமைய 140000 ரூபாய் எமது சொந்த நிதியிலிருந்து செலவு செய்து இந்த சுற்று மதிலை அமைத்துள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.

அது மாத்திரமல்லாமல் பதுரியா வித்தியாலயத்திட்கு அமெரிக்காவின் US-AID நிறுவனத்தின் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாண சபை ஊடாக 08 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இன்ஷா அல்லாஹ் அதற்கான வேலைகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

baduriya

ஆகவே எங்களது பிள்ளைகள் கல்வியில் முன்னேற வேண்டும் அது மாத்திரமல்ல இங்கிருக்கின்ற பிள்ளைகள் நல்லதோர் பிரஜைகளாக மாற்றுவதற்கான ஓர் முதற்கட்ட நடவடிக்கையாக நாங்கள் இதனை மேற்கொள்கின்றோம். இன்ஷா அல்லாஹ் இன்னும் என்னென்ன தேவைகள் இருக்கின்றதோ அவைகளை நாம் செய்வதற்காக காத்திருக்கின்றோம்.

மேலும் நாம் பத்ரியா பள்ளி நிருவாகத்திற்கு கீழ் இயங்கும் மக்தப் மதரசாவிற்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்குவதற்குரிய நிதியினை ஒதுக்கி இருக்கின்றோம். ஏனென்றால் மாணவர்கள் மார்க்க ரீதியாகவும் முன்னேற வேண்டும் என்பதற்காக நாங்கள் அதற்கும் உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம்.

baduriya kids college

பெற்றோர்கள் இன்று செய்யும் தியாகம் நாளை உங்கள் பிள்ளைகளை நல்லதோர் நிலைக்கு கொண்டு சேர்க்கும். மேலும் இன்னும் இந்த சமூகம் படித்த பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்.

அது மாத்திரமல்ல நாம் ஒழுக்கமுள்ள ஓர் சமூகமாக இம்மாணவச்சமூகத்தை உருவாக்க வேண்டும் என தனது உரையில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

Published by

Leave a comment