அம்பாறை: வயிற்றுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற 14 வயது சிறுமி, 05 மாத கர்ப்பிணி என வைத்தியரினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அம்பாறையின் இங்கினியாகல பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு காரணமான நபரை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்ற வேளையில், குறித்த சந்தேகநபர் விசம் அருந்திய நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
தனது மனைவியின் தங்கையான 14 வயதும் 05 மாதங்களுமான சிறுமியையே குறித்த சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விசமருந்திய சந்தேகநபரை வைத்தியசாலையில் அனுமதித்த இங்கினியாகலை பொலிஸார், நீதிமன்றத்திற்கு இது குறித்து அறிவித்துள்ளனர்.
இதனை அடுத்து வைத்தியசாலைக்கு சமூகமளித்த, அம்பாறை மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா, குறித்த சந்தேகநபரின் நிலையை கருத்திற்கொண்டு, ரூபா 150,000 பெறுமதியான மூன்று சரீர பிணையில் அவரை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
இது குறித்தான மேலதிக விசாரணைகளை இங்கினியாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment