Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தலிபான்களிடம் வீழ்ந்துகொண்டிருக்கும் ஹெல்மண்ட்

    காபூல்: தெற்கு ஆப்கானிஸ்தானில் கடுமையான சண்டை நடக்கிறது. அங்கு கேந்திர முக்கியத்துவம் மிக்கசங்கின் மாவட்டத்தில், தலிபான்களிடம் இருந்து பாதுகாப்பு படைகள் பெரும் தாக்குதலை எதிர்கொள்கின்றன. யாருடைய கை அங்கு ஓங்கியுள்ளது என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

  • ஐரோப்பா வந்த அகதிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது

    Bபேர்லின்: கடல் வழியாகவும், தரை மூலமாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைந்த அகதிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு ( ஐ.ஓ.எம்) கூறியுள்ளது.இது கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். இதில் பெருமளவிலானோர் கடல் மார்க்கமாகவே வந்துள்ளனர்.

  • தாஜூதீன் வழக்கு: மஹிந்த ஆதரவு வழக்கறிஞரே விசாரணை!!

    கொழும்பு: முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு மிகவும் நெருக்கமான நீதவான் ஒருவரே வசீம் தாஜூடீனின் கொலை வழக்கை விசாரணை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை இந்த வழக்கு விசாரணையை நடத்தி வந்த கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், சரத் என் சில்வாவிற்கு நெருக்கமான ஒருவரை இந்த வழக்கை விசாரணைய செய்ய நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  • ஹிருனிக்காவின் கடத்தல் விவகாரம்

    கொழும்பு: தெமட்டகொடை பகுதியில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதோடு, அநாதரவாக விட்டுச் சென்ற அறுவர் பயணித்ததாக கூறப்படும், டிபென்டர் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது. சுமார் 12 நாட்களுக்கு முன்னதாக குறித்த டிபென்டர் அவரது பெயரில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

  • உயிரை துச்சமென மதிச்ச நாள் மகிந்த ஒழிப்பு ஆரம்ப நாள்

    ஏ.எச்.எம்.பூமுதீன் கொழும்பு: இலங்கையின் ஜனாதிபதி ஹிட்லர் என வர்ணிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து கவுக்கப்படுவதற்கு ஆரம்பநாளாக இன்றைய நாள் கருதப்படுகின்றது. எவராலுமே அசைக்க முடியாது என வர்ணிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை அசைக்க முடியுமென நிருபித்துக்காட்டிய நாளாகவும் இந்த நாள் அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்படுகின்றது.

  • போராளிகளை திருமணம் செய்யும் வலையமைப்பு துனீஷியாவில் தகர்ப்பு

    துனிஸ்: வெளிநாடுகளில் இருக்கும் போராளிகளை திருமணம் செய்துகொள்ள பெண்களை சேர்த்துக் கொண்டிருந்த வலையமைப்பு ஒன்றை, தாங்கள் முறியடித்துள்ளதாக துனீஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் வடபிராந்தியமான பிஸ்ரெட்டில் இந்த பயங்கரவாத வலையமைப்பைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஒரு விழிப்புணர்வு கடிதம்

    காத்தான்குடி: எதிர்வரும் டிசம்பர் 28ம் திகதி தென்னிந்தியாவிலிருந்து சுன்னத்துல் வல் ஜமாஆத் எழுச்சி மாநாடு கல்முனை பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இந்த மாநாட்டில் பிரதம பேச்சாளராக தென்னிந்தியாவிலிருந்து அப்துல்லாஹ் ஜமாலி கலந்து கொள்ளவுள்ளார்.

  • ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘கல்முனை மாநகரம் – உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும்’ ஆய்வு நூல் வெளியீட்டு விழா

    சப்னி கல்முனை: கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘கல்முனை மாநகரம் – உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும்’ ஆய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று (20) மாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சி தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.

  • புத்தள சகோதரிகளின் “Care and Share” எனும் சமூக நலப் பணிகள்

    புத்தளம்: புத்தளத்தில் சில சகோதரிகள் ஒன்று சேர்ந்து Care and Share என்கின்ற அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் பல்வேறுபட்ட சமூக நலன் பணிகளை செய்து வருகின்றதை அண்மையக் காலமாக காணமுடிகின்றது.கடல் கடந்து வாழும் புத்தளத்து மக்களும், உள்ளுரில் வாழும் சகோதரரிகளுமாக தமது வீட்டு பணிகளின் நேரம் போக சமூகத்தின் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து பல பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.அதனொரு கட்டமாக கல்வியினை தொடருவதில் காணப்படும் அடிப்படை வசதியின்மையினை போக்கும் பணியினை முன்னெடுத்துவருகின்றனர்.

  • சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உலக அழகிப் பட்டம்

    லொஸ் வேகஸ்: அமெரிக்காவின் லொஸ் வேகஸ் பகுதியில் நேற்று 65-வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2015-ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் தட்டிச் சென்றார்.முன்னதாக, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஸ்டீவ் ஹார்வே கொலம்பியாவின் அரியட்னா குடியர்ரெஸ் இந்த ஆண்டிற்கான உலக அழகி என்று தவறுதலாக அறிவித்தார்.

  • இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா?

    யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்திற்கு நேற்று (20) விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  • பாகிஸ்தானில் நபிகள் நாயகத்திற்கு “மரியாதை” செலுத்தும் இந்துக்கள்

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் வசிக்கும் இந்துக்கள் மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்க வரும் 24ம் தேதி மாநாடு நடத்தி அதில் நபிகள் நாயகத்திற்கு மரியாதை செலுத்தி, இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம் என்ற செய்தியை பரப்ப உள்ளனர். அந்த மாநாட்டில் அவர்கள் நபிகள் நாயகத்திற்கு மரியாதை செலுத்த உள்ளனர். இது குறித்து அனைத்து பாகிஸ்தான் இந்து உரிமைகள் இயக்க தலைவர் ஹாரூன் சர்ப்தியால் கூறுகையில்,

←Previous Page
1 … 266 267 268 269 270 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar