காத்தான்குடி: எதிர்வரும் டிசம்பர் 28ம் திகதி தென்னிந்தியாவிலிருந்து சுன்னத்துல் வல் ஜமாஆத் எழுச்சி மாநாடு கல்முனை பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இந்த மாநாட்டில் பிரதம பேச்சாளராக தென்னிந்தியாவிலிருந்து அப்துல்லாஹ் ஜமாலி கலந்து கொள்ளவுள்ளார்.
2015.11.08 சிறீலங்கா தவ்ஹீத் ஜமாஆத்தினால் சிங்கள மொழி மூலமான குர்ஆன் வெளியீட்டு நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொள்ள இருந்த தென்னிந்திய ஏகத்துவ பிரச்சாரகர் P.J ஜெய்னுல் ஆப்தீன் இலங்கைக்கு வர இருந்த தருவாயில் உங்கள் அமைப்பால் 2015.11.05 ஒரு ஊடக அறிக்கை வெளியிடப்பட்டது
அந்த ஊடக அறிக்கையில் உங்கள் அமைப்பால் முன்வைக்கப்பட்ட காரணம் ஒன்றை உங்களுக்கு நினைவு படுத்துவது பொருத்தம் என நினைக்கிறேன்.
“P.J கூறும் சில கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கு மாற்றமாக இருப்பதாலும் இந்த விடயத்தில் சகலரும் மிக அவதானமாவும் எச்சரிக்கையாகவும் நடந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டிக்கொள்கிரது”
உங்கள் அமைப்பின் இந்த ஊடக அறிக்கையை பயன்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஊடாக P.J யின் வருகை ரத்து செய்யப்பட்டது. ( பாராட்டுக்கள் )
எதிர்வரும் டிசம்பர் 28ம் திகதி நடைபெறவுள்ள சுன்னதுல்வால் ஜமாஆத் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வரவுள்ள அப்துல்லாஹ் ஜமாலி இஸ்லாமிய அடிப்படை கொள்கையை சரியானவரா ?
அப்துல்லாஹ் ஜமாலியின் கப்று வணக்க கொள்கை சம்பந்தமாக உங்களது ACJU நிலைப்பாடு என்ன ?
அப்துல்லாஹ் ஜமாலியின் இலங்கை வருகை இலங்கை முஸ்லிம்ளின் ஒற்றுமையை சீர்குலைக்காதா ?
அப்துல்லாஹ் ஜமாலியின் இலங்கை வருகை சம்பந்தமாக ஜம்இய்யதுல் உலமா நிர்வாகம் கவனம் செலுத்தி அவருக்கு எதிராக ஒரு ஊடக அறிக்கை விடுமா ?
அப்துல்லாஹ் ஜமாலியின் வருகை விடயத்தில் ஜம்இய்யதுல் உலமாவின் மெளனம் கலையுமா ?
இன்ஷா அல்லாஹ் இந்த கடிதத்துக்கு பின்னரேனும் ஜம்இய்யத்துல் உலமா அப்துல்லாஹ் ஜமாலின் இலங்கை விஜயத்தில் கவனம் செலுத்தி இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையையும் பாதுகாக்கும் என நம்புகிறேன் .
வஸ்ஸலாம்
ஜஸாக்குமுல்லாஹு ஹைர்
- ஏ.எம். பர்சாத்
C13/4
தக்வா வீதி
காத்தான்குடி-0 3
Leave a comment