புத்தளம்: புத்தளத்தில் சில சகோதரிகள் ஒன்று சேர்ந்து Care and Share என்கின்ற அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் பல்வேறுபட்ட சமூக நலன் பணிகளை செய்து வருகின்றதை அண்மையக் காலமாக காணமுடிகின்றது.கடல் கடந்து வாழும் புத்தளத்து மக்களும், உள்ளுரில் வாழும் சகோதரரிகளுமாக தமது வீட்டு பணிகளின் நேரம் போக சமூகத்தின் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து பல பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.அதனொரு கட்டமாக கல்வியினை தொடருவதில் காணப்படும் அடிப்படை வசதியின்மையினை போக்கும் பணியினை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்த வகையில் புத்தளம் நகரப் பகுதியில் உள்ள புத்தளம் மணல்குன்று பாடசாலையில் கள ஆய்வினை செய்த Care and Share அமைப்பு தெரிவு செய்யப்பட்ட வறிய 50 மாணவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வந்துள்ளது.

இந்த வகையில் பாடசாலை புத்தக பை முதல் அனைத்து பொருட்களையும் இந்த மாணவர்களுக்கு வழங்கி அவர்களின் கல்வியின் ஆர்வத்தை மேம்படுத்தும் திட்டத்தை இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தது,அது மட்டுமல்லாமல் தெரிவு செய்யப்பட்ட இம்மாணவர்களின் காலை உணவினையும் இலவசமாக வழங்கும் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டது.
மாணவர் ஒருவரின் இந்த தேவைகளுக்காக தலா 10 ஆயிரம் ரூபாய்களை ஒதுக்கி இந்த கைங்கரியத்தை ஆரம்பித்துள்ளனர்.இது மட்டுமல்லாமல் அவ்வப்போது இந்த மாணவர்களி் அடைவு மட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களை ஊக்கப்படுத்தும் பணியினையும் முன்னெடுக்கும் வேளையினையும் மேற்கொள்ள எண்ணியுள்ளமை இந்த அமைப்பின் செயற்பாடுகளில் பிரதானமானதாகும்.

இன்று வைபவ ரீதியாக புத்தளம் மணல் குன்று பாடசாலையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.றாசிக் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்வை அலங்கரித்தார்.அதே போல் புத்தளம் Care and Share அமைப்பின் சகோதரிகள் பலரும் கலந்து கொண்டு முழுமையான தமது பங்களிப்பினை வழங்கினார்கள்.
“ஊர் பிள்ளையினை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும்” என்று சாதரணமாக கூறுவதை கேள்வியுற்றிருப்போம்.இந்த நல்ல பணியினை மேற்கொள்ள எவர்கள் எல்லாம தமது நேரகாலத்தை ஒதுக்கி,இதனது வெற்றிக்கு பங்களிப்பு செய்தார்களோ,அவர்களது வாழ்வில் மகிழ்வு ஏற்பட வேண்டும் என்ற ஆசியினை கூறுவது பொருத்தம் என்று எண்ணுகின்றோம்.
எவ்வளவு பணமும்,பதவியும் இருந்து என்ன பயன் சமூகத்தின் அவன் கல்வி கற்காதவனாக இருந்தால்,மாற்றமாக இறைவனின் அன்பும் ,அருளும் எம்மை சூழ வேண்டுமெனில் துாய்மை மிக்க சமூகத்திற்கான பணிகளை நாம் செய்வதன் மூலம் இறைவனின் நல்லாசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பது எமது சிதறல்களாகும்.
இப்பணி தொடர நாமும் எமது கரம் கொடுப்போம் புத்தளம் Care and Share அமைப்பினருக்கு.
- ஆக்கம்: இர்ஷாத் றஹ்மத்துல்லா
- பட உதவி: எம்.ஜ.அஹமட் அஸ்ஜத்
Leave a comment