துனிஸ்: வெளிநாடுகளில் இருக்கும் போராளிகளை திருமணம் செய்துகொள்ள பெண்களை சேர்த்துக் கொண்டிருந்த வலையமைப்பு ஒன்றை, தாங்கள் முறியடித்துள்ளதாக துனீஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் வடபிராந்தியமான பிஸ்ரெட்டில் இந்த பயங்கரவாத வலையமைப்பைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அங்கு பெரிய அளவில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பிறகு, சந்தேகத்துக்குரிய நபர்கள் மீதான தமது எதிர் நடவடிக்கையை துனீஷியா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.கடந்த நவம்பர் மாதம் பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில், அதில் பயணித்த நாட்டின் அதிபரை பாதுகாக்கும் படையினர் 12 பேர் கொல்லப்பட்டனர்.
அத்தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு என ஐ எஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.
துனீஷியாவிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் சிரியா, இராக் மற்றும் லிபியாவில் செயல்படும் போராட்டக் குழுக்களில் இணைந்துகொள்ள சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.