Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அல்பட் என்ஸ்டைனின் சாதனை 10 வயது இலங்கை சிறுமியான நிஷி உக்லேயால் முறியடிக்கப்பட்டுள்ளது

    லண்டன்: இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமியான நிஷி உக்லே இங்கிலாந்தில் சாதனை படைத்துள்ளார். நுண்ணறிவில் சிறந்த விஞ்ஞானியான அல்பட் என்ஸ்டைனின் சாதனை 10 வயது சிறுமியான நிஷி உக்லேயால் முறியடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மென்சா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நுண்ணறிவுத் தேர்விலேயே கலந்துகொண்டு சாதனையை முறியடித்துள்ளார்.

  • ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

    லண்டன்: உலகளாவிய ஊழல் ஒழிப்பு மாநாட்டுக்காக லண்டன் வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் சர்வதேசத்துக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாக பிரித்தானிய தமிழர் பேரவை கூறுகின்றது.

  • ‘பொது மக்களை நினைவுகூரலாம், புலிகளை நினைவுகூர முடியாது’

    யாழ்ப்பாணம்: போரில் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர உறவினர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன, விடுதலைப் புலிகளை நினைவுக்கூரும் நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒருவார கால நினைவு தினம் அனுசரிக்கப்படும் என்று வட-மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளமை தொடர்பில், கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

  • மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மாநாடு!

    S.சஜீத் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் NTJயின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் (13.05.2016) வெள்ளிக்கிழமை காத்தான்குடி வயோதிபர் இல்ல வீதி, மஞ்சந்தொடுவாயில் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு மாநாடு!

  • கஞ்சா ஏற்றுமதி செய்ய இலங்கை நடவடிக்கை

    கொழும்பு: இலங்கையில் பயிரிடப்படும் கஞ்சாவை மருந்து உற்பத்திக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நாட்டில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டுவந்த ஆயுர்வேத மருத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாகவும் நிகழ்ச்சியொன்றில் பேசும்போது அவர் தெரிவித்தார்.

  • ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் கிழக்கில் 600 KM வரையான காபட் வீதி

    திருகோணமலை: ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் கிழக்கு மாகாணத்தில் சுமார் 600 கிலோமீட்டர் வரையான காபட் வீதிகள் இடபப்டவுள்ளன. இவ் வீதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகள் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைகளம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இவ்வீதிகள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைகளத்தின் ஊடாக சுமார் 200 கிலோமீட்டர் வீதிகளும், மிகுதி 400 கிலோமீட்டர் கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகள் ஊடாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  • பால் உற்பத்தியை அதிகரிக்க கேரள மில்மா நிறுவனம் இணக்கம்

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற வருமையை ஒழித்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஏழை விவசாயிகளுக்கு மாடுகளை இலவசமாக வழங்கி அதன் ஊடகாக பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து இலங்கையின் தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த விசேட திட்டத்துக்கு இந்தியாவின் கேரள மில்மா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

  • உள்ளிருந்தும் புறமிருந்தும் வரும் சவால்களை சந்தர்பங்களாக கருதி முன்னே செல்லுங்கள்..!

    இயன்றவரை இறையச்சத்துடனும், இதயசுத்தியுடனும், அர்பணிப்புடனும் உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்கும் நீங்கள் எவ்வளவுதான் அறிவுபூர்வமாகவும், சமயோசிதமாகவும் சத்தியவழி நின்று செயற்பட்டாலும் உங்களுக்கான அங்கீகாரம் சத்திய சோதனைகளிற்கு பின்னரே கிடைக்கும், சிலவேளை உங்கள் மறைவிற்குப் பின்னரே உணரப்படும் அல்லது மறுமை வாழ்விலேயே பரிபூரணமாக கிடைக்கும்.

  • காத்தான்குடியில் வீதி விபத்துக்கான பூச்சாடிகள் அகற்றப்பட்டன

    காத்தான்குடி: காத்தான்குடியில் அன்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வந்தமை யாவரும் அறிந்த ஓர் விடயமாகும். இவ்வதிகரித்துவரும் வீதி விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிந்து இதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த மாதம் 2016.04.19ஆந்திகதி (செவ்வாய்கிழமை) காத்தான்குடி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

  • சட்டவிரோத வர்ண மீன் பிடியில் ஈடுபட்டோரது உபகரணம் பறிமுதல்

    எம்.ரி.எம். யூனுஸ் காத்தான்குடி: காத்தான்குடி கடலில் வர்ண மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வாடிகளை கடற்றொழில் திணைகள அதிகாரிகள்  10.05.2016 செவ்வாய்க்கிழமை திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர். இதன்போது சட்ட விரோதமான முறையில் வர்ண மீன்களை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் சட்டவிரோத உபகரணங்கள், வலைகள், துப்பாக்கி, தங்கூசிப் பக்கட்டுகள், அளவுக்கதிகமான சிலின்டர்கள், ஈட்டியினால் குத்தி பிடிபட்ட மின் என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

  • பனாமா ஆவணங்களில் ராஜபக்சாக்கள் இல்லை

    கொழும்பு: பனாமா ஆவணங்களில் ராஜபக்சாக்கள் இல்லை என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய தாதியர்தின நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் மஹிந்தவின் இரண்டு புதல்வர்களும் இருவேறு இடங்களுக்கு விசாரணைக்குஅழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் கேள்வி எழுப்பினர்.

  • பொலிஸ் நிதி மோசடி விசாரணையின் பின்னர் முச்சக்கர வண்டியில் சென்ற யோஷித்த

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் செவ்வாய்க்கிழமை (10) ஆஜராகியிருந்தார். சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பாக இடம்பெறும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் பெற்று கொடுப்பதற்காகவே அவர் அங்கு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

←Previous Page
1 … 216 217 218 219 220 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar