கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் செவ்வாய்க்கிழமை (10) ஆஜராகியிருந்தார். சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பாக இடம்பெறும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் பெற்று கொடுப்பதற்காகவே அவர் அங்கு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யோஷித்த, தனக்கு நாளைய தினமும் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவிற்கு வரவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததோடு முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி சென்றமையானது பார்ப்போரை வியப்படைய வைத்த செயலாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.