-
எம்.ரி.எம். யூனுஸ்
காத்தான்குடி: காத்தான்குடி கடலில் வர்ண மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வாடிகளை கடற்றொழில் திணைகள அதிகாரிகள் 10.05.2016 செவ்வாய்க்கிழமை திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர். இதன்போது சட்ட விரோதமான முறையில் வர்ண மீன்களை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் சட்டவிரோத உபகரணங்கள், வலைகள், துப்பாக்கி, தங்கூசிப் பக்கட்டுகள், அளவுக்கதிகமான சிலின்டர்கள், ஈட்டியினால் குத்தி பிடிபட்ட மின் என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்றொழில் திணைகளத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன் இவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.