Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சாதாரண கார்கள் முன்னரை விட விலை குறைவு

    கொழும்பு: கோடீஸ்வரர்கள் உபயோகிக்கும் கார்களுக்கே விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சாதாரண 15 வகை கார்களுக்கு முன்னரை விட குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். வாகன இறக்குமதியாளர்கள் வர்த்தக உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கிணங்கவே காரின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

  • அட்டாளைச்சேனை விபத்து: ஜப்பார் ஜெம்ஸத் எனும் 12 வயது சிறுவன் உயிரிழப்பு

    சப்னி அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அட்டாளைச்சேனை லக்கி ஸ்டோருக்கு முன்னால் இன்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில், அட்டாளைச்சேனை கோணாவத்தையைச் சேர்ந்த ஜப்பார் ஜெம்ஸத் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த சிறுவன் வீதியை கடக்க முற்பட்ட போது, கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற காரொன்று மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

  • “எங்களிடம் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை”- மெத்யூஸ்

    லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் படுதோல்வியடைந்த இலங்கை அணி, 2வது டெஸ்டிலும் தோற்றது. இதனால் டெஸ்ட் தொடரை 0-2 என பறி கொடுத்தது.

  • “தாங்கள் கூறுவது போல் எனக்கு விளையாட முடியாது”- டில்சான்

    கொழும்பு: திலகரத்ன டில்சான் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டிகளில் விளையாடமைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இங்கிலாந்துக்கு செல்வதற்கு முதல் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • பொறுப்பற்ற முறையில் ஊடக அறிக்கை விட்ட கே.எல்.எம்.பரீட் இன் செயற்பாடு…

    காத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் என்ற அமானிதமான பொறுப்பிலிருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் ஊடக அறிக்கை விட்ட கே.எல்.எம்.பரீட் இன் செயல்பாட்டினை பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் பலர் எமது வன்மையான கண்டனத்தை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

  • ஷிப்லி பாரூக்கின் நேரடி தலையீட்டால் வாகனேரி குளத்தில் மீன்பிடிக்கும் முஸ்லிம்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு

    ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஓட்டமாவடி: மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச எல்லைக்குள்ளும் கிரான் பிரதேச செயலகத்தின் அதிகாரத்திற்குள்ளும் இருக்கின்ற வாகனேரி குளத்தில் முஸ்லிம் சகோதரர்களும் தமிழ் சகோதரர்களும் தங்களது ஜீவனோபாயத்திற்காக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டடு வந்தனர். முஸ்லிம்கள் தரப்பில் சுமார் 280 பேர் வரையில் 1990ம் ஆண்டைய யுத்தகாலத்திற்கு முன்பு குறிப்பிட்ட வாகனேரி, அதனை அண்டிய முள்ளிவட்டவான், பொத்தனை போன்ற பிரதேசங்களில் நிரந்தமாக வசித்து வந்தமையும் வரலாறாகும். இந்த நிலையிலே 1962ம் ஆண்டு குறித்த பிரதேசத்திற்கான பிரதேச செயலத்தினால்…

  • கலாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீதின் “இஸ்லாமிய தகவல் களஞ்சியம்” நூல் வெளியீட்டு விழா

    எம்.எஸ்.எம். சாஹிர் கொழும்பு: ஓய்வு பெற்ற ஆசிரியை கலாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்களின் “இஸ்லாமிய தகவல் களஞ்சியம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 04 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கொழும்பு -09 தெமட்டகொட, வை.எம்.எம். ஏ பேரவையில் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் மண்டபத்தில் நடை பெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தலைமையில், புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் இடம்பெறும் இவ்விழாவில், நகரத்திட்டமிடல் மற்றும்…

  • 50 கிலோ நிறையுடைய மரவெள்ளிக் கிழங்கு

    கம்பளை: கம்பளை சீஹக பிட்டி பிரதேசத்தில் வீட்டில் ஒரு வருட காலமாக வளர்த்த வந்த மரவள்ளி கிழங்கு 50 கி.கி. எடையைக் கொண்டிருந்ததாக வீட்டின் உரிமையாளர் கூறுகிறார். இக்கிழங்கைப் பார்வையிட பொதுமக்கள் சென்றுவருகின்றனர்.

  • சிகா வைரஸ்: உடலுறவைத் தவிர்க்கவும்

    லண்டன்: சிகா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து திரும்பும் மக்களை பாதுகாப்பான உடலுறவு நடைமுறைகளை பின்பற்றுமாறும் அல்லது குறைந்தது எட்டு வாரங்களுக்காவது உடலுறவில் ஈடுபட வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கூறிய இந்த அறிவுரை, உலக சுகாதார நிறுவனத்தின் முந்தைய பரிந்துரையை விட இரட்டிப்பு மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

  • பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொறியியலாளர் சிப்லி பாறுக்

    புனானை: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை – கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி தெற்கு 211G, கிராம சேவையாளர் பிரிவிலுள்ள காரமுனை கிராமத்திற்கு 2016.03.30ஆந்திகதியும், புனானை 211B, கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்திற்கு 2016.05.05ஆந்திகதியும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

  • “பதவி இராஜினாமா செய்தி உண்மைக்கு புறம்பானது” இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

    கோலாலம்பூர்: புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சை தான் இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

  • 1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள்

    கொழும்பு: வெளிநாட்டில் வாழும் இலங்கைப் பிரஜைகள் 1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 205 206 207 208 209 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar