சாதாரண கார்கள் முன்னரை விட விலை குறைவு

India-manufactured Hyundai cars are seen in line after unloading them off car-carrier ship at Chinese-built Hambantota portகொழும்பு: கோடீஸ்வரர்கள் உபயோகிக்கும் கார்களுக்கே விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சாதாரண 15 வகை கார்களுக்கு முன்னரை விட குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். வாகன இறக்குமதியாளர்கள் வர்த்தக உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கிணங்கவே காரின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இதற்கிணங்க டொயோட்டா லிட்ஸ், டொயோட்டா பெஸ்ஸோ, ஹொண்டா சி.ஆர்.எக்ஸ், ஹொண்டா இன்சைட், ஹொண்டா ஜெஸ் சட்டில், ஹொண்டா வெசல், ஹொண்டா ப்ரீட், நிஹான்லீப், நிஹான் மார்ச், சுசூகி வெகன் ஆர், சுசூகி ஸ்டிங்ரே போன்ற கார்களுக்கே விலையதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முச்சக்கர வண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர், தற்போது முச்சக்கர வண்டியின் விலை பத்து இலட்சம் ரூபாவாக உள்ளதால் இதனால் அவர்களது வருமானத்தில் பிரச்சினைகள் நிலவுவதாகவும் முச்சக்கர வண்டி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிணங்க பெற்றோலில் செல்லும் முச்சக்கர வண்டிகள் 35,000 ரூபாவாலும் டீசலில் செல்லும் முச்சக்கர வண்டிகள் 70,000 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். சாதாரண கார்களுக்கன்றி சொகுசு கார்களுக்கே விலையதிகரிப்புச் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

India-manufactured Hyundai cars are seen in line after unloading them off car-carrier ship at Chinese-built Hambantota port

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர்களில் ஒருவரான சிசிர ஜயக்கொடி இது பற்றி தெரிவிக்கையில் ஜனாதிபதியை சங்கடத்தில் தள்ளுவதற்காகவே நாம் இத்தகைய முடிவை எடுத்தோம் என்று கூறியிருக்கிறார். இது எவ்வளவு மோசமான கூ ற்று என்பதை சகலரும் உணர வேண்டும்.

நாம் கார் இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் போன்றோரை அழைத்து அவர்களின் வேண்டுகோளிற்கிணங்கவே இந்த முடிவை எடுத்துள்ளோம். காலத்துக்குக் காலம் இதில் மாற்றங்கள் ஏற்படுத்தாமல், ஊழல் மோசடிகள் இடம்பெறாமல் ஆரோக்கியமாக இத்துறை இயங்க வேண்டும் என்பதையும் கருத்திற் கொண்டே இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

வங்குரோத்து அரசியல் செய்பவர்களே இத்தகைய கருத்துக்களை வெளியிடுகின்றனர். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பல தடவைகள் வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டது. இதற்கான காரணம் என்ன? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

தற்போது வீதிகளில் பெரும் வாகன நெருக்கடி நிலவுகிறது. வீதிகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் நிறைவடையும் வரை வாகனங்களின் இறக்குமதியைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s