Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சர்ச்சைக்குரிய சரோஜா சிறிசேன ஜேர்மன் தூதுவரானது எப்படி?

    கொழும்பு: இந்தியாவில் உணவு மற்றும் மது விற்பனை நிறுவனமான “அப்பர் கிரஸ்ட்” சஞ்சிகையின் முகப்பில் வைன் கோப்பையுடன் மொடலாகி, இராஜதந்திர சம்பிரதாயத்தை உடைத்து, இலங்கை வெளிவிவகார அமைச்சினை அலட்சியப்படுத்திய சரோஜா சிறிசேன, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் அரசியல் ஆதரவிற்கமைய மும்பாய் தூதுவராக செயற்பட்டிருந்தார்.

  • புலமைப் பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள்

    கொழும்பு: 2016ம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் சிங்கள மொழி மூலம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு 159 புள்ளிகள் வெட்டுப்புள்ளிகளாக பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி மூலமான வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக கீழே காணலாம்.

  • அபிசிகன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடம்

    வவுனியா: கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று கோகுலதாசன் அபிசிகன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தை பெற்றுள்ளார். அபிசிகனின் தந்தையான கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோர் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களாவர்.

  • ரசிகர்களை அழுக வைத்த சச்சித்ர சேனாநாயக்க

    கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க நேற்று தான் பாடிய பாடல் ஒன்றை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போன்று ஒரு பாடலை வெளியிட்டிருந்தார். தற்போது “ருஹிரு பிந்து கிரி ரசட்ட” என தொடங்கும் தனது 2வது பாடலை அவர் வெளியிட்டுள்ளார்.

  • நீங்களும் அமெரிக்கா செல்லலாம்

    வாஷிங்டன்: அமெ­ரிக்­காவில் நிரந்தர வதி­விட உரிமை (கிறீன் கார்ட்) வழங்­கு­வ­தற்கு 50,000 பேரை தெரி­வு ­செய்­வ­தற்கு (04/10) முதல் இணை­யத்தில் விண்­ணப்­பிக்­க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெ­ரிக்க அரசு வரு­டாந்தம் பல நாடு­களை சேர்ந்த 50,000 பேரை லொத்தர் குலுக்கல் முறையில் தெரி­வு­ செய்து நிரந்­தர வதி­விட உரிமை வழங்கி வரு­கி­றது.

  • சினிமா பாடல்களுக்கு நடனமாடும் கலாச்சாரம் எம் சமூகத்திலிருந்து ஒழிக்கப்படவேண்டும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

    – எம்.ரீ. ஹைதர் அலி வாழைச்சேனை: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஸா மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் விழா 2016.10.03ஆந்திகதி (திங்கட்கிமை) பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம். பரீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

  • ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பதவி நியமனமும் அதன் வெளியீட்டு உரிமைக் கையளிப்பும்

    இனிய வாசகர்கள் அனைவருக்கும் எனது முஹர்ரம் 1438 இஸ்லாமியப் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹூ

  • முஸ்லிம்களைச் சந்திக்கிறார் மகிந்த

    – எம்.எஸ்.எம். ஸாகிர் கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் பிரதிநிதிகளை எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

  • “அவசரப்பட்டு அறிக்கைவிடக் கூடாது”- ஹிஸ்புல்லாவுக்கு சுமந்திரன் பதில்

    கொழும்பு: செய்தியைச் சரியாக வாசித்து விளங்கிக் கொள்ளாமல் அவசரப்பட்டு அறிக்கைவிடக்கூடாது. நான் சொல்லாத ஒன்றை எப்படிப் பொய் என்று கூற முடியும்.? இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். வடக்கு – கிழக்கு இணைப்புக்கு அஷ்ரப் ஒருபோதும் இணங்கவில்லை. தவறான தகவல்களைநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்து வருகின்றார் என்று புனர்வாழ்வுமற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா குற்றம் சுமத்தினார்.

  • தபால் சேவைகள் முஸ்லிம் விவகார, அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக முஸ்தபா நியமனம்

    ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: தபால் மற்றும் தபால் சேவைகள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவின் சிரேஸ்ட உறுப்பினரும், அமைப்பாளருமான எச்.எம்.எம்.முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் மாத்திரமின்றி சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சிமாறா தொண்டனாக இருந்து செயல்பட்டுவருவதன் காரணமாக கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் விசேட பணிப்புரையின்கீழ் இவருக்கான நியமனம் கடந்த 28.9.2016 புதன்கிழமை தபால்…

  • இரவானால் அச்சத்தில் மூழ்கும் ஏறாவூர்; இரட்டைப் படுகொலையின் எதிரொலி

    ஏறாவூர்: புங்குடுதீவு மாணவி வித்தியா,சிறுமி சேயா போன்றவர்களின் பாலியல் வல்லுறவுக் கொலைச் சம்பவங்கள் முழு இலங்கையையும் உலுக்கியதை நாம் அறிவோம்.அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளது ஏறாவூர் இரட்டைப் படுகொலை சம்பவம். புனித ஹஜ் பெருநாளைக்கு முதல் தினமான அரபா நோன்பு தினம் 11-09-2016 அன்று இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டு முழு ஊரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அன்றைய தினம் நள்ளிரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாயும் மகளும் கொடூரமானமுறையில் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி மறுநாள் நன்பகள்தான் அயல் வீட்டாருக்கே தெரிய…

  • மக்களால் பதுக்கப்பட்ட 10 பில்லியன் டொலர் கறுப்புப் பணம் அரசிடம் கையளிப்பு

    டெல்லி: இந்திய அரசின் பொது மன்னிப்பு அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏறக்குறைய 10 பில்லியன் டொலர் தொகையை அறிவிக்கப்படாத வருமானமாக இந்தியாவிலுள்ள பல லட்சக்கணக்கான மக்கள் வெளிப்படுத்திருக்கின்றனர். அறிவிக்கப்படாத வருமானத்தை மக்கள் தாங்களாகவே வெளிப்படுத்தி கொள்வதற்கு வழங்கப்பட்ட நான்கு மாத காலக்கெடு வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், வரி ஏய்ப்பு செய்தவர்களாக சந்தேகத்துக்குள்ளானோரில் பலர் கடைசி நேரத்தில் இதுவரை அறிவித்திராத வருமானங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

←Previous Page
1 … 165 166 167 168 169 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar