சர்ச்சைக்குரிய சரோஜா சிறிசேன ஜேர்மன் தூதுவரானது எப்படி?

saroja-sirisenaகொழும்பு: இந்தியாவில் உணவு மற்றும் மது விற்பனை நிறுவனமான “அப்பர் கிரஸ்ட்” சஞ்சிகையின் முகப்பில் வைன் கோப்பையுடன் மொடலாகி, இராஜதந்திர சம்பிரதாயத்தை உடைத்து, இலங்கை வெளிவிவகார அமைச்சினை அலட்சியப்படுத்திய சரோஜா சிறிசேன, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் அரசியல் ஆதரவிற்கமைய மும்பாய் தூதுவராக செயற்பட்டிருந்தார்.

வெளியுறவு சேவை சிரேஷ்டத்தன்மையில் 45வது இடத்தில் உள்ள நிலையில் அந்த அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் உயன்கொட என்பவரை ஜேர்மன் தூதுவராக, ஜனாதிபதி நியமித்திருந்தார். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆயத்தமாக இருந்தன. அந்த நியமிப்பிற்கான ஜேர்மன் அரசாங்கத்தின் இணக்கப்பாடும் கிடைத்திருந்தன. இதற்கிடையில் சரோஜினி சிறிசேனவின் நியமிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சரோஜா சிறிசேனவின் முறையற்ற நடத்தையின் காரணமாக ஜனாதிபதியினால் அவரது ஜேர்மன் நியமிப்பு பரிந்துரை செய்யப்படாமல் இருந்த நிலையில், மங்கள சமரவீர ஜனாதிபதியிடம் கோரி இந்த அதிகாரிக்கான அனுமதியை பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

saroja-sirisena

இதுவரை காணப்பட்ட வரையறைகளை உடைத்து சரோஜினி சிறிசேனவை மங்கள சமரவீர ஜேர்மன் தூதுவராக நியமித்துள்ளார். வெளிநாட்டு கடமைகளை நிறைவு செய்து கொழும்பில் வந்து 2 வருடங்களில் தங்கியிருக்கும் ஒருவருக்கே இதுவரையில் வெளிநாட்டு சேவையில் மங்கள சமரவீரவினால் நியமிப்புகள் வழங்கப்பட்டன.

எனினும் சரோஜினி சிறிசேன 3 வருடங்கள் மும்பாய் நகரில் சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில் நேரடியாக ஜேர்மன் தூதுவராக அவரை நியமிப்பதற்கு மங்கள சமரவீர செயற்பட்டுள்ளார். தற்போது வரையில் ஜேர்மனியின் பெர்ங்போர்ட் நகரில் தூதரக ஜெனராலாக செயற்படுகின்ற ரஞ்சித் குணரத்ன, தூதுவராக பெயரிடப்பட்டுள்ள சரோஜினி சிறிசேனவை விடவும் 18 வருடங்கள் மூத்த வெளிநாட்டு சேவை அதிகாரியாகும்.

சரோஜினி சிறிசேன ஜேர்மனுக்கு செல்வதற்கு முன்னர் ரஞ்சித் குணரத்னவை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s