Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘செல்பி’ எடுக்க முயன்ற இரு இலங்கை மாணவிகள் ஓமானில் பலி

    ஓமானின் – சலாலாஹ் பிரதேசத்தில் குளமொன்றிற்கு அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்க முயன்ற இரு இலங்கை மாணவிகள  அதில் வீழந்து உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  • மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வு

    கல்குடாத்தொகுதியின், மீராவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள மீராஜூம்ஆ பள்ளிவாயலின் நிருவாக சபையின் ஏற்பாட்டில் இன்ஷாஅல்லாஹ் 2016.10.09ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை (இன்று) இஷாத்தொழுகையின் பின் மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயலில் ”உண்மை உதயம்” இதழின் ஆசிரியர் மார்க்க அறிஞர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) அவர்களினால் ”முஹர்ரமும் அதன் சிறப்பும்” எனும் தலைப்பில் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வொன்று இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  • இலங்கை-பிலிப்பைன்ஸ் 30 நாட்கள் “ஒன் அரைவல்” வீசா உடன்படிக்கை

    கொழும்பு: இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸின் ராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் ஒருவர் மற்றைய நாட்டில் முன்கூட்டியே வீசாவை பெறாமல் சென்று 30 நாட்களுக்கு தங்கியிருக்க முடியும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான 55 வருட உறவில் இது முக்கிய உடன்படிக்கையாக கருதப்படுகிறது.பிலிப்பைன்ஸின் வெளியுறவு செயலாளர் பேர்பெக்டோ ஆர் யாசே மற்றும் இலங்கையின் தூதுவர் அருணி ரணராஜா ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

  • “அரசை எதிர்த்து போராட தயார்”- மகிந்த

    இரத்தினபுரி: அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை ஒன்று சேர்த்து தற்போதைய ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக போராட தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.கூட்டு எதிர் கட்சியினர் நேற்று (08/10) இரத்தினபுரி நகரில் நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த இதனை தெரிவித்தார். ஆளும் அரசானது தற்போது மக்கள் மத்தியில் அதிகளவு எதிர்ப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்த மகிந்த ராஜபக்ஷ, மிரட்டல்களின் மூலம் அரச விரோத குரல்களை முடக்க முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

  • அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்ற மாணவன் நிரான் சமரவிக்ரமவுக்கு பெற்றோருடன் அமெரிக்கா செல்ல வாய்ப்பு

    கொழும்பு: 2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்ற மாணவன் நிரான் சமரவிக்ரமவுக்கு (196 புள்ளிகள்) அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசப்புத்ர வழங்கியுள்ளார். அமெரிக்காவுக்கு இரண்டு வாரங்கள் குறித்த மாணவன் தனது பெற்றோர்களுடன் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

  • அன்வர் வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 2016

    ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி மட்/அன்வர் வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு (06.10.2016 வியாழன்) காத்தான்குடி கடற்கரை ஆ.ம.ஹாஜியார் தோட்ட வளாகத்தில் கல்லூரியின் அதிபர் ஏ.எல்.முனீர் அஹமட் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர்  எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன்,  பாடசாலையின் முன்னாள் அதிபர் ஐ.எல்.எம்.தாசீம், ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.சீ.ஏ.அலீம், அஷ்ஷெய்ஹ் எம்.எச்.எம்.றிழ்வான் (மதனி) உட்பட பொற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  • மட்டு- நீதவான், 12 பொலிஸ் நிலையங்களின் உயரதிகாரிகளுக்குமிடையில் விஷேட சந்திப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களின் உயரதிகாரிகளுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவுக்குமிடையிலான விஷேட சந்திப்பு ஒன்று  (05 ) புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. மேற்படி விஷேட சந்திப்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானினால் அழைக்கப்பட்ட பொலிஸ் உயரதிகாரிகளும்,பதிவாளர்,சட்ட உதவி ஆணைக்குழு சட்டத்தரணிகள்,சமுதாயஞ்சார் சீர்திருத்தப்பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  • காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வெதகெதர பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தற்போது நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் (ஐ.பி.) ஆரியபந்து வெதகெதர (சி.ஐ.) பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கான பதவி உயர்வு நியமனக் கடிதத்தை இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வழங்கியுள்ளார்.

  • வெளிநாட்டினர் வரி இன்றி காணி வாங்கலாம்!

    கொழும்பு: வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் போது விதிக்கப்படும் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்குவது குறித்த சட்ட மூலத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் போது 15 வீத வரி அறவீடு செய்யப்பட்டு வந்தது.

  • கல்முனை கல்வி மாவட்டத்தில் 784 மாணவர்கள் சித்தி!

    அஸ்லம் எஸ். மௌலானா கல்முனை: இம்முறை தரம்-5 புலமைப் பரீட்சையில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய நான்கு கல்வி வலயங்களை உள்ளடக்கிய கல்முனை கல்வி மாவட்டத்தில் மொத்தம் 784 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இதன் பிரகாரம் கல்முனை கல்வி வலயத்தில் 322 மாணவர்களும் சம்மாந்துறை கல்வி வலயத்தில் 124 மாணவர்களும் அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்தில் 228 மாணவர்களும் திருக்கோவில் கல்வி வலயத்தில் 110 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.

  • இக்றா பாடசாலை உயர்தர மாணவர்களுக்கான பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் இரண்டாம் கட்ட புலமைப்பரிசில்

    எம்.ரீ. ஹைதர் அலி பூநொச்சிமுனை: பூநொச்சிமுனை கிராமத்தில் அமைந்திருக்கும் இக்றா பாடசாலை மாணவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பாடசாலை வரலாற்றில் சிறந்ததோர் சாதனையினை நிலைநாட்டி இருந்தனர். மிகவும் வறிய நிலையிலுள்ள இப்பாடசாலை மாணவர்கள் தமது உயர்தர கல்வியினை தொடர்வதில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிய நிலையில் இம்மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

  • “குற்றச் செயல்களை தடுக்க மரண தண்டனை அவசியம்”- ஹிஸ்புல்லாஹ் ஆலோசனை

    கொழும்பு: நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் கடத்தல் போன்ற மோசமான குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் – தடுப்பதற்கும் மரண தண்டனைச் சட்டத்தை அமுல்படுத்த நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

←Previous Page
1 … 164 165 166 167 168 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar