சினிமா பாடல்களுக்கு நடனமாடும் கலாச்சாரம் எம் சமூகத்திலிருந்து ஒழிக்கப்படவேண்டும் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

shibly-at-vc– எம்.ரீ. ஹைதர் அலி

வாழைச்சேனை: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஸா மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் விழா 2016.10.03ஆந்திகதி (திங்கட்கிமை) பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம். பரீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வாழைச்சேனை ஆயிஸா மகளிர் மகா வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். பரீட் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோரினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களை பாராட்டி நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டதோடு, மௌலவி வை.எல்.எம். றிஸ்வி ஆசிரியரினால் வெளியிடப்பட்ட ஆயிஷாவின் புலமைகள் எனும் தலைப்பிலான சிறப்பிதழின் முதற்பிரதியும் மாகாண சபை உறுப்பினருக்கு வழங்கி வைக்கப்பட்டது. மேலும் தனது 40000 ரூபா சொந்த நிதியிலிருந்து பாடசாலைக்கு பத்து மின்விசிறிகளையும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வழங்கிவைத்தார்.

மேலும் தொடர்ந்து தனதுரையில்…

5ஆம்தர புலமைப்பரிசில் பரீட்சை என்கின்றபோது என்னைப்பொறுத்தவரையில் அது பிள்ளைகளுடைய பரீட்சையல்ல பிள்ளைகளின் பெற்றோர்களின் பரீட்சை என்னுடைய பிள்ளை எவ்வாறேனும் சித்தியடைய வேண்டுமென்பதற்காக பல செலவுகளை மேற்கொண்டு தாமும் பிள்ளைகளுடன் சேர்ந்து கற்று கற்பித்து கொடுப்பவர்கள் எமது தாய்மார்கள். இதில் ஒரு விடயம் என்னவென்றால் புலமைப்பரிசில் பரீட்சையில் காட்டுகின்ற அக்கரையும், கரிசனையும் அந்த பிள்ளை பல்கலைக்கழகம் வரை சென்று கல்விகற்க வேண்டுமென்று காட்டுவது கிடையாது.

எனது பிள்ளை க.பொ.த. சாதாரண தரத்திலே 9 ஏ சித்திபெற வேண்டும் உயர்தரத்திலே 3 ஏ சித்தி பெறவேண்டுமென்ற சிந்தனையுள்ள பெற்றோர்கள் மிக குறைவாகவே காணப்படுகின்றனர். கடந்த 5 வருடகால ஆய்வு ஒன்றினை நாங்கள் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு ஊடாக செய்திருந்தோம். 5ஆம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் பிள்ளைகள் எவ்வாறு அவர்களுடைய உயர்கல்வி வரையும் செல்லுகின்றார்கள் என்று. நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் படி புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைகின்ற 70 வீதமான பிள்ளைகள் சாதாரண தரத்தில் தவற விடுகின்றார்கள். அதற்கு நிறைய காரணங்கள் இருந்தும் அவற்றில் ஒன்றாக பெற்றோர்கள் நினைத்து கொள்வது என்னுடைய பிள்ளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து விட்டார் என்னுடைய பிள்ளை திறமையான பிள்ளை கல்வியில் முன்னேறுவார் என்ற நம்பிக்கையின் காரணமாக அப்பிள்ளைக்கு கல்வி ரீதியாக செலுத்துகின்ற அக்கரையும், கரிசனையும் புலமைப்பரிசில் பரீட்சைக்குப்பிறகு குறைந்து கொண்டு செல்லுகின்றது.

shibly-at-vc

மேலும் தனியார் கல்வி வியாபாரிகளால் சாதாரனதர மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் என்ற போர்வையில் பாடசாலைகளுக்குள்ளும் வெளி இடங்களிலும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து முறையான கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ஓர் நிலைமை உருவாகி இருக்கின்றது. சாதாரண தரத்தை முடித்து விட்டு வெறும் ஒரு ஆறு மாத அல்லது ஒரு வருட குருகிய கால கற்றை நெறியினை முடித்துக்கொண்டு நான் வெளிநாட்டிற்குச் சென்று இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்கின்ற அந்த எண்ணம் அவன் மனதில் உருவாக்கப்படுகின்றபோது முதற்கட்டமாக சாதாரண தரத்திலே அவன் நம்பிக்கை இழக்கின்றான் இரண்டாவது உயர்தரத்திலே தோற்றுப்போவதற்கு முனைகின்றான். ஆக மொத்தத்தில் தன்னுடைய வாழ்க்கையை தொலைப்பதற்குரிய எல்லா முன்னெடுப்புக்களையும் செய்துவிடுகின்றான்.

மேலுமொரு விடயத்தினை நான் சுட்டிக்காட்ட வேண்டும் சினிமா பாடல்களுக்கு எமது பிள்ளைகளை பாடசாலைகளில் நாம் நடனம் ஆடச்செய்வது. இச்சினிமா பாடல்களின் சரியான அர்த்தம் எமக்கு தெரிந்தால் எமது பிள்கைகளை நாம் சினிமா பாடல்களுக்கு நடனமாடச்செய்ய மாட்டோம். இவ்வாறான கலாச்சாரங்கள் எமது சமூகத்திலிருந்து மாற வேண்டும் இசை என்பது எமது இஸ்லாமிய மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். நான் சொல்லும் விடயங்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களாகிய உங்கள் அனைவரையும் பாதிக்குமாக இருந்தால் இதற்காக நான் மண்ணிப்பும் கோரமாட்டேன். இவ்வாறான கலாச்சாரங்களினால் எமது சமூகம் சீரழிந்து செல்லுகின்றதென்பதையும் பெற்றோர்களாகிய நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அன்மையில் எமது ஏறாவூர் பிரதேசத்தில் நடைபெற்ற தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொலை செய்யப்பட்டவர்களும் எமது மார்க்கமான இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றி நடந்தவர்கள் இவர்களை கொலை செய்தவர்களும் எமது மார்க்கத்தை பின்பற்றி நடந்தவர்கள் மிகவும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் அறபாவுடைய தினம் மிகவும் கன்னிணமிக்கதொரு நாளில் இந்த படுகொலை நடைபெற்றது. அதற்கு சூத்திரதாரியாக பின்னுள்ள விடயங்களை பார்க்கின்றபோது உண்மையில் அவர்கள் அறிவு மட்டத்தில் மாத்திரமல்ல போதைப்பொருளுக்கும் அடிமையானவர்கள். என்ன செய்கின்றோம் என்பதே அவர்களுக்குத்தெரியாது. இவ்வாறு ஏன் கொலை செய்தோம் என்றே அவர்களுக்குத்தெரியாது. அவ்வாறான சூழ்நிலையிலேயே நாம் வாழுகின்றோம். உங்களுடைய பெண் பிள்ளைகளை மிகவும் தத்துரூபமாகவும், மிக பாதுகாப்பாகவும் வளர்க்க வேண்டும். உங்களுடைய பெண் பிள்ளைகளை நீங்களே எங்கு செல்வதாக இருந்தாலும் அழைத்துச்செல்ல வேண்டும் வேறு யாரோடும் அனுப்பாதீர்கள் தனிமையிலே உங்களின் பெண் பிள்ளைகளை அனுப்புகின்றபோது சிறு வயது பெண் பிள்ளைகளே கூடுதலாக சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். எனவே எமது பெண் பிள்கைகளனின் எதிர்காலத்திற்கும், பாதுகாப்பிற்குமாகவே இதனை கூறுகின்றேன் என தனதுரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களும், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ஐ. சேகு அலி, வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் அவர்களும் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி பிரதி வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாபா. ஏ. றிஸ்மியா பானு, கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எம்.எல்.ஏ. ஜூனைட் மற்றும் மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபை தலைவரும், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட் அவர்களும் ஏனைய அதிதிகளாக வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலய அதிபர் என்.எம். கஸ்ஸாலி மற்றும் அமெரிகன் கொலேஜ் பணிப்பாளர் நிஸார்தீன் ஆகியோரும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மாணவிகளின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s