-
துருக்கி தலைநகரில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை
அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் மீது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்தார். துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சாதனை வீரரானார் அசாத் ஷபிக்
பிரிஸ்பன்: பாகிஸ்தான் அணி வீரர் அசாத் ஷபிக் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளர். இவர் 6-வது நபராக களம் இறங்கி 9 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியின் 6-வது வீரராக களம் இறங்கிய அசாத் ஷபிக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இதற்கு முன் கேரி சோபர்ஸ் 8 சதங்கள் அடித்ததே அதிகபட்ச சதமாக இருந்தது.
-
சவூதிப் பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்களுக்கான புதிய சட்டம்
றியாத்: சவூதி அரேபிய பெண்களை வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்கள் திருமணம் செய்து கொள்வது குறித்து, ஒரு இறுக்கமான சட்டம் ஒன்றை அமுல்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சவூதி நாட்டுப் பெண்களைத் திருமணம் முடிக்கும் பிறநாட்டு ஆண்களை போதைப் பொருள் பாவனை குறித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டத்தைக் கொண்டுவர உள்ளது.
-
கிழக்கில் புற்றுநோய் தாக்கம் அதிகரிப்பு
கல்முனை: கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனரென விசேட புற்றுநோய் வைத்திய நிபுணர் டாக்டர் சாமா குணதிலக்க தெரிவித்தார். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் தர நிர்வாகப் பிரிவினால்ஒழுங்கு செய்யப்பட்ட புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட புற்றுநோய் வைத்திய நிபுணர் டாக்டர் சாமா குணதிலக்க விசேட அதிதியாகவும் வளவாளராகவும் கலந்து…
-
பிரித்தானியாவில் 19 மீற்றர் உயரத்திற்கு எழுந்த பேரலை!
லண்டன்: உலக வரலாற்றில் இதுவரை பதிவாகாத மிகப்பெரிய கடல் அலை வடக்கு அட்லாண்டிக் கடலில் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐஸ்லாந்து மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான பிராந்திய கடல் மட்டம் திடீரென 19 மீற்றர் வரை உயரமாக எழுந்ததாக உலக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்த பேரலையானது 6 மாடி கட்டடம் ஒன்றிக்கு சமமானதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
ரஷ்யாவுக்கு ஒபாமா எச்சரிக்கை
வோஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலின்போது வலையமைப்பில் புகுந்து மின்னஞ்சல்களை திருடியதாகவும், இந்த நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினிடம் ஆணையிட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.
-
முடிவுக்கு வந்த ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரம் பெற்ற செயலாளர் தொடர்பான சர்ச்சை
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரம் பெற்ற செயலாளர் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து கட்சியின் செயலாளராக மன்சூர் ஏ காதர் செயல்படுவது தொடர்பாக எவ்வித பிரச்சினைகளும் இல்லை என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் கூறுகியிருக்கிறார்.
-
கொழுத்தும் வெயிலில் எதற்காக நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் பாஹிர் எனும் சிறுவன் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும்?
– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கல்குடா ஓட்டமாவடி, காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலையத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் பாஹிர் எனப்படும் சிறுவன் கொழுத்தும் வெயிலில் இயந்திர டெக்டரின் மீது பயணித்து பத்து கிலோ பாரமுடைய சீமந்து கற்களை ஏற்றி இறக்கும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளமையானது மிகவும் மனவேதனை அளிக்க கூடிய விடயமாகவும், சிறுவர்களினுடைய உரிமைகளை மீறி நடக்கும் செயலாகவும் (14.12.2016) ஓட்டமாவடி பழைய சேர்மன் வீதியில் கவணிக்க கூடியதாக இருந்தது.
-
சுமணரத்ன பிணையில் விடுதலை
மட்டக்களப்பு: மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதியும் கிழக்கு மாகாண பிரதி சங்கநாயக்கருமான அம்பிட்டியே சுமணரத்ன தேரரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்க மெரின் படையினரின் தங்குமிடம் இலங்கையில்
கொழும்பு: அமெரிக்க படையினர் இலங்கையில் தங்கிருக்கும் வகையில் பாரிய கட்டடத்தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மெரின் (Marine) இராணுவத்தினரின் தங்குமிட வசதி, துணை கட்டடங்கள் மற்றும் தூதரகம் ஊழியர்களுக்கு அவசியமான ஏனைய வசதிகளை கொண்டுள்ளதாக தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
கட்டார் கஃபாலா முறையில் மாற்றம்
டோஹா: கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறவும்,வேறு பணிகளுக்கு செல்லவும் அவர்கள் பணி புரியும் நிறுவனத்தின் அனுமதியை வாங்க வற்புறுத்தும் தொழிலாளர் ஆளெடுப்பு குறித்த சட்ட அமைப்பினை அந்நாடு நிறுத்த முடிவு செய்துள்ளது.