Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் காகிதம் வெட்டும் உபகரணம் வழங்கி வைப்பு

  • உலகின் மிகவும் உயரமான பாலம் சீனாவில் திறப்பு

    சங்கை: நிலப்பரப்பிலிருந்து 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் ஒன்று சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியில் மிகப்பெரும் முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது.இநதப் பாலம் 200 மாடி கட்டடம் அளவுக்கு உயரமானது.

  • ரஷியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள்: புடின்

    மொஸ்கோ: அமெரிக்காவில் உள்ள 35 ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதற்குப் பதிலாக, ரஷியாவில் பணிபுரியும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என ரஷிய அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்திற்கு எவ்வாறு பதில் அளிப்பது என்பதற்கு அடுத்த மாதம் புதிய அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்பது வரை, தான் பொறுத்திருக்கப் போவதாக புதின் தெரிவித்துள்ளார்.

  • விலைபோகும் மருத்துவமும் மக்களின் பரிதாபமும்….

    காத்தான்குடி: இப்ப சின்ன சலசலப்பொன்று சமூகவலைத்தளங்களின் ஊடாக இடம்பெற்று வருகிறது. காத்தான்குடியின் பிரதான தனியார் மருத்துவமனையின் “விலைப்பட்டியல்” சலசலப்புத்தான் அது! மருத்துவத்துறையில் இந்தியாவைப் பின்பற்றும் இலங்கையின் தனியார் மருத்துமனைகள் போன்றே காத்தான்குடி தனியார் மருத்துவமனையும் அமைவதாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

  • உலகில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர்

    சங்கை: ஆர்ஜெண்டினா வீரர் கார்லோஸ் டெவெஸ் (Carlos Tevez) தற்போதைய நிலவரப்படி உலகில் அதிக ஊதியம்பெறும் கால்பந்தாட்ட வீரராகத் திகழ்கிறார்.சீன கால்பந்து கிளப்பான சாங்காய் சென்ஹுவாவுடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார் கார்லோஸ் டெவெஸ். இதற்காக அவருக்கு ஒரு சீசனுக்கு 40 மில்லியன் டொலர் அதாவது இலங்கை மதிப்பில் ரூ.599 கோடி (ரூ.5990600000.00) சம்பளம் வழங்கப்படவுள்ளது.

  • மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தம்!

    கொழும்பு: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பனி மூட்டம் காரணமாக இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் நேற்று நடைபெறவில்லை.அபுதாபி, சார்ஜா, டுபாய், குவைத், ஓமான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானங்கள் வரவில்லை எனவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • சமூக மட்ட வாகன விபத்துக்களை குறைக்க விஷேட செயற்திட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் பிரிவிலும் 2016-ஜனவரி மாதம் தொடக்கம் 2016 டிசம்பர் மாதம் இன்று வரை பாரிய வீதி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 எனவும் பாரிய காயங்கள் மற்றும் அங்கவீனம் ஏற்படுத்திய வீதி விபத்துக்கள் 300ற்கும் அதிகம் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் ஜே.பி.கே.ஜெயவீர தெரிவித்தார்.

  • வினைத்திறன் கண்காட்சி-காத்தான்குடியில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் மட்டக்களப்பு பாலர் பாடசாலை கல்விப் பணியகம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஊடாக நடைமுறைப்படுத்தும் 2016 வினைத்திறன் கண்காட்சி 28-12-2016 இன்று புதன்கிழமை காத்தான்குடி அந்-நாஸர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • பண்டிகைக்காலப் பரிசுப் பொருட்கள் பெறுவதை தவிர்க்க உத்தரவு

    கொழும்பு: பண்டிகை காலத்தில் அரசு அதிகாரிகள் அன்பளிப்பு பொருட்கள் பெறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு ஒன்றை, அந்த அணைக்குழு, பொது நிர்வாக அமைச்சகத்தின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது.

  • சபரகமுவ ஆசிரியர் இடமாற்றங்களில் மீண்டும் அரசியல் தலையீடு

    – பா.திருஞானம் 2017ஆம் ஆண்டுக்கான சபரகமுவ மாகாண ஆசிரியர் இடமாற்றங்களில் மீண்டும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன. நியாயமான காரணங்களை முன்வைத்து இடமாற்றத்தை கோரியவர்களின் இடமாற்றங்கள் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். சபரகமுவ மாகாண ஆசிரியர் இடமாற்றல் சபைகளில் இடம்பெற்று வரும் அரசியல் தலையீடு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

  • அதி விமர்சையாக இடம்பெற்ற காத்தான்குடி நலன்புரி ஐக்கிய இராச்சிய அமைப்பின் ஒன்றுகூடல்

    லண்டன்: காத்தான்குடி நலன்புரி ஐக்கிய இராச்சிய ஒன்றியத்தின் 3வது மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு 27-12-2016 லண்டன், Tooting நகர் ஜெஸ்மின் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது. பகல் 1 மணியிலிருந்து பகல் போசணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு இராப்போசணத்துடன் இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது.

  • “இன்னாலில்லாஹி..”, கோரவிபத்து: பெண் வைத்தியர் உட்பட மூவர் பலி

    இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்த்தில் பெண் வைத்தியர் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் பலியாகியுள்ளனர். ஏ9 வீதி மதவாச்சி, நாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கெப் ரக வாகனமும், யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கொள்கலன் லொறி (கன்டைனர்) ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

←Previous Page
1 … 148 149 150 151 152 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar