அங்காரா: துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் மீது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்தார். துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கலைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உரையாற்றிய தொடங்கிய போது, சிரியாவின் அலெப்போ நகர் குறித்த தகவலுடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய ஒருவர் கார்லோஃபை நோக்கி சுட்டதாக தகவல்கள் தெரிக்கின்றன.
இந்த தாக்குதலில், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற கலைக்கூடத்தில் இருந்த ஒலிவாங்கியின் அருகே சூட் ஆடை அணிந்த இருவர் தாக்குதலில் காயமடைந்து தரையில் கிடப்பதை, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காண்பித்துள்ளன.