Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஹெரோயின் வரவைத் தடுக்க கடலோரக் காவல் நிலையம்

    வவுனியா: கடற்படையினரும், காவல்துறையினரும் இணைந்து காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, கடலோரக் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு காவல் நிலையத்திற்கு இரண்டு சுற்றுக்காவல் படகுகளும் கையளிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

  • “அரசியல் வாதிகள் பிழை விடும் சந்தர்ப்பத்தில் மிம்பர் மேடையை பயன்படுத்தி குறைகளை சுட்டிக்காட்டுங்கள்”- ஷிப்லி

    எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் வேண்டுகோளுக்கிணங்க 78 பிளாஸ்டிக் கதிரைகள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கினால் 30.11.2016அன்று ஜம் இய்யாக்காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டன. பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஷிப்லி பாறுக் தனதுரையில்,

  • கால்நடை வளர்க்கும் பல்கலைப் பட்டதாரிப் பெண்

    கலஹா: கலஹா, பெல்வூட் பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான சாலிக்க நவோதனி என்ற பெண், கடந்த 2003 ஆம் ஆண்டு பௌத்தம் மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றும் தற்பொழுது கால்நடை வளர்த்து அன்றாட தேவைகளை நிறைவேற்றி வருகின்றார். பட்டம் பெற்று கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றார்.

  • “டான் பிரியசாத்” விடுதலையானார்

    கொழும்பு: இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த “டான் பிரியசாத்” என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் இன்று காலை பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார்.

  • 2.5 மில்லியன் வாக்குகள் பின்தங்கிய டிரம்ப்! ஜனாதிபதியானது எப்படி…?

    வோஷிங்டன் DC: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 2.5 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. எனினும், மொத்த வாக்கு எண்ணிக்கை இதுவரை நிறைவடையவில்லை. தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 65,152,310 வாக்குகள் பெற்றுள்ளார்.

  • ஹபீஸ் மீதான பந்துவீச்சுத் தடை நீக்கம்

    லாஹூர்: பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் முகமது ஹபீஷ், சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பந்துவீச அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கட் சபையின் விதிமுறைகளுக்கு முரணாக முகமது ஹபீஸ் பந்து வீசுவதாக இருமுறை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு வருடத்திற்கு போட்டித் தடை விதிக்கப்பட்டது.

  • கோத்தா வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவு

    கொழும்பு: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடை உத்தரவை நீக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • கட்டார்: பொதுமன்னிப்பு அவகாசமும் தண்டனைகளும்…

    டோஹா: கட்டாரில் பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டும் அதனைப் பயன்படுத்தாமல் கட்டாரில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தீவிர சோதனைகள் இடம்பெறும் என கட்டார் அறிவித்துள்ளது. மேற்படி காலத்தை பயன்படுத்தி தங்களது நாடுகளுக்கு செல்லாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

  • ‘செய்குல் பலாஹ்’வின் நினைவாக கந்தூரி!!

    காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபிக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அன்னவர்களின் பெயரில், காத்தான்குடி மத்ரஸத்துல் பலாஹ் அமைப்பினரின் ஏற்பாட்டில் கதமுல் குர்ஆன் மற்றும் அன்னதானம் நிகழ்வொன்று காத்தான்குடி முகித்தீன் தைக்கிய்யாவில் இடம்பெற்றிருக்கின்றது.

  • பாராளுமன்ற அமர்வுக்கு ரூபா 2,500; காரியால கொடுப்பனவு ரூ. 1 இலட்சம்

    கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர்களின் காரியாலயமொன்றை பேணும் பொருட்டு அதற்கான செலவுகளுக்காக மாதாந்தம் ரூபா ஒரு இலட்சத்தினை வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

  • வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஜனவரி முதல் ஓய்வூதிய திட்டம்

    கொழும்பு: வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஜனவரி முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அத்துடன் பயிற்றப்பட்டவர்களை வெளிநாட்டு தொழிலுக்கும் அனுப்பும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

  • சுகயீனமுற்று மதீனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் எம் சகோதரருக்காகப் பிரார்த்திப்போம்

    கடந்த 16-11-2016 அன்று உம்றாவை நிறைவேற்றச் சென்ற, காங்கெயனோடையைச் சேர்ந்த ஹயாத்து முகம்மது ஆதம் லெப்பை(73) என்பவர் தனது காலில் ஏற்பட்டிருந்த உபாதை காரணமாக கடும் சுகயீனமுற்று தற்போது மதீனாவில் உள்ள மன்னர் பஹத் வைத்தியசாலையின் மேற்பார்வையில், குபா பள்ளிவாயலுக்கு முன்னால் அமைந்துள்ள அத்-தார் தனியார் வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றார்.

←Previous Page
1 … 152 153 154 155 156 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar