WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அமெரிக்காவின் தென் பகுதியில் கால் பதிக்கும் சீனா

    பீஜிங்: வட அமெரிக்காவின் பொருளாதார உடன்படிக்கையான நஃப்டா வை மாற்றியமைக்க போவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், மெக்சிக்கோ எல்லைப் பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்போவதாகவும், அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்கான செலவை 30 வீத இறக்குமதி வரி விதித்து மெக்சிக்கோவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • கந்தூரிச் சோறு நஞ்சானதால் மூவர் மரணம்! 600 பேர் வைத்தியசாலையில்!!

    இரக்காமம்: அம்பாறை மாவட்டம், இரக்காமம் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (6) வழங்கப்பட்ட கந்தூரிச் சோறு அஜீரணமானதால் 600க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரக்காமம் வைத்தியசாலையில் மாத்திரம் இன்னமும் 80 பேர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகின்றது. இந்த நோயாளிகளுக்கு மேலதிகமாக அக்கறைப்பற்று மற்றும் அம்பாறை பகுதி வைத்தியசாலைகளில்  சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • நள்ளிரவு வேளையில் ரகசிய சந்திப்பு ஏன்..?

    கல்முனை: முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியாளர்களான பாலமுனை அன்சீல், தாகீர் சேமன் ஆகியோர் நேற்று இரவு பதினொரு மணிக்கு பின்பு கல்முனை கடற்கரை பள்ளிக்கு அப்பாலுள்ள தமிழ் பிரதேச கடற்கரை மணலில் முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது பிரமுகர்களுடன் இரகசிய சந்திப்பு ஒன்றினை நடாத்தியுள்ளார்கள் என்று காதும் காதும் வைத்தமாதரி ஊருக்குள் பேசிக்கொள்கின்றார்கள்.

  • கூச்சல், குழப்பம்; பாராளுமன்றம் ஒத்திவைப்பு

    கொழும்பு: ஜெனீவா மனித உரிமைகள் சபையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் (06) விவாதங்கள் இடம்பெறவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள், அவை நடவடிக்கையை குழப்பியதால் பாராளுமன்றத்தை நாளை (07) வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

  • மர்ஹூம் அஷ்ரஃபின் கப்ரில் பூ பறிக்கும் ஜவாத்

    கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ அப்துல் றசாக் (ஜவாத்) எனது நல்ல நண்பன். அவர் உள்ளதை உள்ளபடி பேசக் கூடியவர்.ஆனாலும் முட்டாள் தினத்தின் முன்; பின் திகதிகளில் அவர் பேசிய பேச்சுகள் பல போராளிகளின் மனங்களைப் புண்படுத்தியுள்ளன. தலைவர் அஷ்ரஃப் தீகவாப்பியில் மலர்தட்டு வைத்துக் கும்பிட்டார்.

  • மூளையை பாதிக்கும் சாட்-நாவ் வழிகாட்டி

    லண்டன்: Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டியை பயன்படுத்தும்போது மனித மூளையின் குறிப்பிட்ட செயற்பாடு நின்றுபோவதாக லண்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கணிசமான வாகன ஓட்டுநர்களுக்கும் பொதுமக்களுக்கும் சாட்-நாவ் எனப்படும் செயற்கைக்கோள் திசைகாட்டியின் உதவியில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாது.

  • கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் விவகாரமும் அதன் பின்னணியில் உள்ள தில்லு முள்ளுகளும்

    கல்முனை: கடந்த 2013 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இடம்பெற்ற வலயக் கல்வி அதிகாரி ஒருவருக்கும் பிரதி அதிபர் ஒருவருக்குமிடையிலான கை கலப்பின் பின்னர் கல்முனைக் கல்வி வலயத்தில் கடமையாற்றிய பி.எம்.எம். பதுர்தீன் கல்லூரியின் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பல சவால்களுக்கு மத்தியில் தனது கடமையினை முன்னெடுத்து பாடசாலையினை ஒரு சுமுகமான நிலைக்கு கொண்டு வந்திருந்தார். அத்துடன் பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் கொழும்புக் கிளையின் உதவியுடன் பல்வேறு முன்றேற்ற…

  • “ஐ.எஸ். அமைப்பில் இணைந்துகொண்ட இலங்கையர்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்”- பிரதமர்

    கொழும்பு: இலங்கையிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டவர்கள், கடும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

  • “எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மட்டக்களப்பு மாவட்ட குப்பைகள் கொடுவாமடுவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்”-முதலமைச்சர்

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குப்பை கூழங்களை கொடுவாமடு நோக்கி கொண்டும் செல்லும் நடவடிக்கையினை உடனடியாக எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பணிப்புரை விடுத்துள்ளார்.

  • வில்பத்து பிரச்சினையின் தீர்வுக்கு தடையாக இருப்பவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மட்டுமே – ஹுனைஸ் பாரூக்

    வில்பத்து பிரச்சினை தொடர்பில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்பதுடன், அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மக்களும், சிவில் அமைப்புக்களும் அழுத்தங்களை வழங்கியிருந்தன.

  • ஐக்கிய இராச்சியத்தில் மாற்றப்பட்டுள்ள புதிய சட்டங்கள்

    லண்டன்: பிரித்தானியா அரசின் சார்பில் வெளிவந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், 25 வயதுக்கு மேற்பட்ட பணியில் இருக்கும் நபர்களுக்கு குறைந்த ஊதியம் ஒரு மணிநேரத்திற்கு £7.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. 18-20 வயது நபர்களுக்கு £5.60ம், 21-24 வயதுக்குள் இருக்கும் நபர்களுக்கு £7.05 என்ற அளவில் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020ல் இது £9ஆக உயரலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

  • முஸ்லிம்கள் நீளமாக தாடி வளர்க்க சீனாவில் தடை

    பீஜிங்: பயங்கரவாதத்தைக் கருத்திற்கொண்டு, சீனாவின் புதிய சட்டத்தின்படி, உய்குர் இனத்தை சேர்ந்த முஸ்லிம்கள், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் துணியை அணிவது மற்றும் வழக்கத்திற்கு மாறாக நீளமான தாடி வளர்ப்பது ஆகியவற்றின் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 131 132 133 134 135 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar