Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய மத்ரசாக்களின் வளர்ச்சி வழிகோலியுள்ளன

    – அமைச்சின் ஊடகப்பிரிவு திவுரும்பொல: மத்ரசாக்களின் வளர்ச்சியும் ஹாபிழ்கள், உலமாக்கள் மற்றும் மௌலவிமார்களின் பெருமளவான உருவாக்கமுமே முஸ்லிம்கள் வாழ்கின்ற கிராமங்களில் இஸ்லாமிய விழுமியங்களை வலுப்படுத்தவும் மூட நம்பிக்கைகள் அருகிப் போகவும் பெரிதும் வழிவகுத்தன.

  • மு.கா தலைவர் பணம் பெற்றாரா அல்லது கொள்ளையடித்தாரா? இதனை கூறும் உத்தமர்கள் யார்?

    முகம்மத் இக்பால், சாய்ந்தமருது 2௦௦1 இல் நோர்வே அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசுக்கு பணம் வழங்கியதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டினை 16 வருடங்களுக்கு பின்பு முன்வைத்துள்ளார்கள். இந்த குற்றச்சாட்டினை முன்வைக்க ஏன் இவ்வளவு காலம் தேவைப்பட்டது? சர்வதேச ரீதியில் நன்மதிப்பினை பெற்றுள்ள நோர்வே மு.கா க்கு பணம் வழங்குவார்களா? ஏன் பணம் வழங்க வேண்டும்? அப்படி வழங்குவதனால் அவர்கள் அடையும் நன்மைகள் என்ன? இதற்குரிய ஆதாரம் உண்டா? என்ற கேள்விகளுக்கு விடை வழங்குவதற்கு யாரும் இல்லை.

  • வீதியில் பலூன் விற்றவர் பின்னாளில் கோடீஸ்வரர்

    திவோந்ரம்: எம்.ஆர்.எப்-ன் நிறுவனர் பெயர் கே எம் மாமென் மாப்பிள்ளை. கே.எம். மாமென் கடந்த 1922 நவம்பர் 28ஆம் திகதி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தை வங்கி மற்றும் செய்திதாள் நிறுவமனம் நடத்தி வந்தார். இந்திய சுதந்திரத்துக்கு முன்னர் டிரிவான்கோர் சமஸ்தானம் மாமென் தந்தையின் சொத்துக்களை பறிமுதல் செய்தது.

  • பாபர் மசூதி இடிப்பு: “நாங்கள் வெளிப்படையாகவே செய்தோம்”

    அயோத்தி: 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் வழக்கில், உமா பாரதி உள்ளிட்ட 13 பேர், அவர்கள் மீதான குற்றவியல் சதி குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • பிரித்தானியப் பொதுத் தேர்தல் ஜூன் 8ம் திகதி

    லண்டன்: பிரிட்டனில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திட்டத்தை பிரதமர் தெரீசா மே அறிவித்துள்ளார். தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் அவரது நேற்றைய ‘திடீர் அறிவிப்பு’ வெளியாகியிருக்கிறது.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதன் பின்னணியில், புதிய பொதுத் தேர்தல் மட்டுமே அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர முடியும் எனும் முடிவுக்கு தான் வந்துள்ளதாக தெரீசா மே தனது உரையில் குறிப்பிட்டார்.

  • சவுதி பொது மன்னிப்பு அவகாசம்: ஒரு மில்லியன் சட்டவிரோத தொழிலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவார்களா?

    றியாத்: சவுதி அரேபியாவில் தற்போது அமலில் உள்ள பொதுமன்னிப்பு திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, குறைந்தது ஒரு மில்லியன் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று  எதிர்பார்ப்பதாக சவுதி அரசு கூறுகிறது.  சவுதி அரேபியாவுக்கு, மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தும், ஆப்ரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களிலிருந்தும் குடியேறிகள் வருகிறார்கள்.

  • சாதனைகளை நோக்கி ரங்கன ஹேரத்

    கொழும்பு: இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 1990களில் அறிமுகமாகி இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தவுள்ளார்.   ரங்கன ஹேரத், கடந்த 1999ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். விரைவில் ’90’களில் அறிமுகமாகி இன்னும் டெஸ்ட் போட்டிகளில் அதிக காலம் விளையாடும் வீரர் என்ற பெருமையை ரங்கன பெறவுள்ளார். இதுகுறித்து ரங்கன கூறுகையில்,

  • தொடரும் தகாத உறவுகள்…. மற்றுமொரு பெண் மரணம்!

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு கிராமங்களில் மத்தியகிழக்கு நாடுகளுக்கு உறவினர்களை அனுப்பி அவர்கள் அனுப்பு பணத்தை செலவழித்துக்கொண்டு தேவையற்ற சமூக கலாச்சார சீரழிவுகள் நடைபெறும் தொடர்ச்சியான எதிரொலி வந்தாறுமூலை பெண்ணிண் மரணம் வெளிப்படுத்துகின்றது.

  • மீராவோடையில் ஹயாத்து முகம்மது முஹம்மது மர்சூக் என்பவருக்கு சொந்தமான தையல் கடை தீக்கிரை

    எம்.ரீ. ஹைதர் அலி மீராவோடை: கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் கயாத்து முகம்மது முஹம்மது மர்சூக் என்பவருக்கு சொந்தமான தையல் கடை 2017.04.17ஆந்திகதி-திங்கட்கிழமை  காலை தீக்கிரையாகியுள்ளது. இவர் மிக நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் தையல் கடை செய்து வருகிறார்.

  • ஆரையம்பதி மாணவனின் சடலம் காத்தான்குடி கடற்கரையில் கரையொதிங்கியது

    காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் நீராடச் சென்ற மாணவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கிக் காணாமல்போன மாணவனின் சடலம் இன்று நண்பகல் காத்தான்குடி “நதியா” கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  • சுற்றுலாப் பயணிகளுக்கு தேயிலைப் பொதி பரிசு

    கொழும்பு: இலங்கைக்கு சுற்றுலா செல்லுபவர்களுக்கு தேயிலை பொதிகளை பரிசாக வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்திவருகிறது. நாட்டிற்குள் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த தேயிலைப் பொதிகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே இதன் நோக்கமாக கருதப்படுகிறது. இத் திட்டம் குறித்து பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசநாயக்க அமைச்சரவைக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

  • வடகொரியாவின் புதிய ஏவுகணை முயற்சி தோல்வி

    பியொங்யாங்: வடகொரியாவின் ஏவுகணை முயற்சி தோல்வியடைந்திருப்பதாக அமெரிக்கா மற்றும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றத்தின் இடையில், அமெரிக்காவை வடகொரியா எச்சரித்த அடுத்த நாள், கிழக்கு கடற்கரைப் பகுதியில் நடத்திய சோதனை தோல்வியில் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.

←Previous Page
1 … 129 130 131 132 133 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar