வில்பத்து பிரச்சினையின் தீர்வுக்கு தடையாக இருப்பவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மட்டுமே – ஹுனைஸ் பாரூக்

Hunais MPவில்பத்து பிரச்சினை தொடர்பில் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்பதுடன், அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மக்களும், சிவில் அமைப்புக்களும் அழுத்தங்களை வழங்கியிருந்தன.

இந்த பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் கையாளாமல், அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் தனது சுயநல அரசியலுக்காக ஊடகம் மூலமாக மக்களுக்கு படம் காட்டி நாடகமாடியதாலேயே இவ்வளவு காலமும் இந்த பிரச்சினை ஊதி பெருப்பிக்கப்பட்டது என்பதனை உணர்ந்து கொண்டதனாலேயே மக்கள் இவ்வாறு அழுத்தங்கள் வழங்குவதற்கு காரணமாகும்.

எப்படியோ இப்பிரச்சினையை தீர்க்குமுகமாக அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை தனது ஆதரவை வழங்கும் வகையில் அனைத்துக் கட்சிகலிலுமுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளையும் அழைத்து கடந்த வியாழன் (30ம் திகதி) மஹ்ரிப் தொழுகையின் பின் கலந்துரையாடி மிக முக்கிய மூன்று தீர்மானங்களை மேற்கொண்டதுடன் மறுநாள் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை சந்திப்பதற்கான 25 பேர்கள் கொண்ட குழுவும் நியமிக்கபட்டது.

இந்த குழுவில் உலமாக்கள் சார்பில் 1௦ பேர்களும், கட்சிகள், சிவில் அமைப்புக்கள் சார்பில் 15 பேர்களும் தெரிவு செய்யாட்டார்கள். அதில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நானும், பிரதி அமைச்சர் பைசால் காசிமும் உள்வாங்கப்பட்டோம். ஆனால் இந்த குழுவில் அமைச்சர் ரவுப் ஹக்கீம்தான் கலந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் பிடிவாதமாக இருந்தார்.

ஏற்கனவே பல வாரங்களுக்கு முன்பு தீர்மானித்ததன் பிரகாரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் கல்முனை பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதிலும், நிறைவடைந்த பல அபிவிருத்தி பணிகளை மக்களுக்கு கையளிப்பதிலும், மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பொது கூட்டத்திலும் கலந்து கொள்கின்றார் என்பதனை அறிந்ததனால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல சூழ்ச்சிகளில் ஈடுபட்டார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தலைவர் ரவுப் ஹக்கீமை கொழும்புக்கு அவசரமாக அழைப்பதன் மூலம் இந்த கல்முனை பிரதேசத்தில் நடைபெற இருகின்ற அபிவிருத்தி பணிகளை தடுத்து நிறுத்த முடியும் என்ற கபடத்தனமான சூழ்ச்சியின் காரணமாகவே, முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக குறித்த கூட்டத்தில் ரவுப் ஹக்கீம்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் பிடிவாதமாக இருந்ததுக்கு காரணமாகும்.

இதற்கிடையில் அன்றைய இரவு ஜனாதிபதியை சந்திக்கும் குழுவில் நியமிக்கப்பட்ட முஸ்லீம் காங்கிரஸ் சார்பானவர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்கிவிட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன் சார்பானவர்கள் உள்வாங்கப்பட்டனர். இந்த குள்ளத்தனமான செயல்ப்பாட்டின் விளைவாக எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

மு.காங்கிரஸுடைய அரசியல் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தால் அனைத்து முஸ்லீம் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுப்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டு இதற்கான தீர்வும் உடனடியாக கிடைத்திருக்கும்.

ஆனால் அவ்வாறு தீர்வு காணப்பட்டால், என்னால் மட்டுமே ஜனாதிபதியிடம் பேசி தீர்மானம் எட்டப்பட்டது என்று சமூக வலைத்தலங்களில் தனது கூலி எழுத்தாளர்களை கொண்டு வீரவசனம் பேசி அரசியல் வியாபாரம் செய்ய முடியாது என்பதற்காகவும்,

அத்துடன் இந்த பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட்டால் மக்களை உசுப்பேத்தி ஒவ்வொரு தேர்தல்களிலும் அப்பாவி மக்களை மடயர்கலாக்க முடியாது என்ற காரணத்தினால், தொடர்ந்து இந்த பிராச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த விருப்பத்தினாலும், எப்படியோ இதனை குழப்பும் விதத்திலேயே அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

ஆனாலும் முஸ்லீம்களின் ஏகோபித்த கட்சி என்ற வகையில் மு.காங்கிரஸ் தலைவருக்கும் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் நாளை திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இப்பிரச்சினையை தீர்த்து மக்கள் அவர்களது உரிமைகளை அடைய வேண்டும் என்று இதய சுத்தியுடன் விரும்பியிருந்தால், கட்சி பேதமின்றி யார் செய்தால் என்ன பிரச்சினைக்குரிய தீர்வுகள் காணப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கும்.

என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனை பாரூக்  உரையாற்றி இருந்தார்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s