WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உலகிலேயே அதிக எடையுடையவராக கருதப்பட்ட 500 கிலோ- எகிப்து பெண்ணுக்கு அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை

    அபுதாபி: உலகிலேயே அதிக எடையுடையவராக கருதப்பட்ட எகிப்து பெண்ணுக்கு அபுதாபி மருத்துவமனையில் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. 500 கிலோ (1,102lb) எடையுடையவராக கூறப்பட்ட இமான் அப்ட் எல் அடி, மும்பை மருத்துமனையில் பெற்ற சிகிச்சையால், 250 கிலோவுக்கு அதிகமான எடையைக் குறைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று அவர் இந்தியாவில் இருந்து கிளம்பிச் சென்றார்.

  • பிரமாண்டமான ஆதரவு அலை: மகிந்தவின் பலம் குறையவில்லை

    கொழும்பு: நடந்து முடிந்த மே தின பேரணியின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு பெருமளவில் மக்கள் கூடியது இலங்கை அரசியல் வட்டாரங்களில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி, புதிய அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன. ஜனாதிபதியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன இருக்க, பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க பணியாற்றுகிறார்.

  • “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம்களின் கல்வி தொடர்ந்தும் பின்னடைவு”

    அஸ்லம் எஸ்.மௌலானா பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ள 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வு அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடைசி இடங்களுக்கு தள்ளப்பட்டிருப்பது குறித்து இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் தனது அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது.

  • அய்யூப் அஸ்மினை மீளழைத்து, அவ்விடத்திற்கு மற்றொருவரை நியமிக்க NFGG தீர்மானம்

    நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உத்தியோகபூர்வ அறிக்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் சகோதரர் அய்யூப் அஸ்மினை மீளழைத்து, அவ்விடத்திற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொருவரை நியமிக்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.2013 செப்டம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

  • இலங்கை அணியின் பயிற்சியாளராக அலன் டொனால்ட் நியமனம்

    கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் அலன் டொனால்ட் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கபட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்றும் சம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்று விளையாடவுள்ளது.அந்த தொடருக்கான தற்காலிக பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் அலன் டொனால்ட் (50) நியமிக்கபட்டுள்ளார்.

  • இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த மியன்மார் அகதிகள் விளக்கமறியலில்

    காங்கேசன்துறை: இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட மியன்மார் முஸ்லிம் அகதிகள் மற்றும் இரு இந்தியர்களை எதிர்வரும் மே 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த மியன்மார் அகதிகள் நேற்று (30) யாழ் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர்.இவ்வாறு மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகள் காங்கேசன் துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

  • “மூளைகெட்ட தேர்தல்”

    இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: இன்று (30) முகைதீன் மெத்தை பெரிய பள்ளிவாயல் நிர்வாக சபையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்று அப்பள்ளிவாயலில் இடம்பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு தற்பொழுது தேர்தல் மண்டபத்தை நோக்கி நகர்கின்றது.

  • காணாமல் போன சிறுமி முதலையின் வயிற்றுக்குள் இருந்து மீட்பு

    கல்னேவ: சிறுமி ஒருவர் காணாமல் போனநிலையில் முதலையின் வயிற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சோகச் சம்பவம் அநுராதபுரம், கல்னேவ பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

  • ’26 லீட்டர் ரத்தத்தில் குர்ஆன் எழுதிய சதாம்’: சதாமின் சுவாரஸ்யமான நினைவுகள்

    பக்தாத்: மாட மாளிகைகளை கட்டுவதில் பிரசித்தி பெற்ற சதாம் ஹுசைன், பெரிய அளவிலான மசூதிகளை கட்டுவதிலும் விருப்பம் கொண்டவர். பக்தாதில் சதாம் ஹுசைன் கட்டிய ‘உம் அல் குரா’ (Umm al-Qura) மஸ்ஜிதும் அதில் ஒன்று. 2001 ஆம் ஆண்டு, வளைகுடா போரில் சதாம் ஹுசைன் வெற்றி பெற்ற பத்தாவது ஆண்டு வெற்றிவிழாவிற்காக சிறப்பாக கட்டப்பட்ட இந்த மஸ்ஜித் ஸ்தூபிகள் ஸ்கட் ஏவுகணையை நினைவுபடுத்துபவை.இஸ்ரேலுடனான கடும் யுத்தத்தின் போது ஸ்கட் ஏவுகணையை சதாம் ஹுசைன் பயன்படுத்தினார்.

  • “தேவைப்பட்டால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கும்”

    வோஷிங்டன் DC: அணு ஆயுதங்களை கொரிய பிராந்தியத்திலிருந்து அகற்றுவதற்காக, வடகொரியாவுடன் பேச்சு நடத்த அமெரிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தேவைப்பட்டால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அமைதியான தீர்வு என்பதே சரியான தீர்வாக அமையும் என்று வடகொரியாவின் நெருங்கிய கூட்டாளியான சீனாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • இறக்காமத்தில் பௌத்த விகாரை அமைக்க எதிர்ப்பு: ஹர்த்தால் அனுஷ்டிப்பு

    இறக்காமம்: அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் பௌத்த வழிபாட்டு மையமொன்று அமைப்பது தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அந்த பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.பௌத்தர்கள் அல்லாத தமது பிரதேசத்தில் பௌத்த வழிபாட்டு மையம் அமைக்கும் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த பிரதேச முஸ்லிம்களினால் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமது பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

  • கென்பரா பல்கலைகலைக்கழத்தால் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட காத்தான்குடி அரூஸ் செரீப்டீன்

    காத்தான்குடி: செய்யத் அரூஸ் செரீப்டீன், அவுஸ்திரேலிய, கென்பரா பல்கலைகலைக்கழத்தால் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.கணனி முகாமைத்துவத்திலேயே இவர் கலாநிதி பட்டம் பெற்றமை விசேட அம்சமாகும். இவருக்கான பட்டம், அண்மையில் கென்பரா பாராளுமன்ற கேட்போர் கூடத்தில் வைத்து பெற்றுக் கொண்டார். பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் பேராசிரியர் சாரா ரைன் வழங்கி வைத்தார்.

←Previous Page
1 … 127 128 129 130 131 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar