Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கடையடைப்புக்கு விடைகொடுக்கும் காத்தான்குடி !

    – AK49 காத்தான்குடி: ஹர்த்தால்- அது காத்தான்குடி மக்களுக்கு புதிதல்ல! 1980-1990- 2000ம் ஆண்டின் மத்திம காலப்பகுதியில் இருந்து யுத்தம் நிறைவுக்கு வரும் வரைக்கும் காத்தான்குடியில் அவ்வப்போது ஹர்த்தால் இடம்பெற்றுக்கொண்டே இருக்கும். புதன்கிழமை வந்தாலே காத்தான்குடி பஸார் ஆடிப்போகும். “நோட்டீஸ் ஒன்றும் இன்னும் வெளியாகவில்லையா” என மக்கள் ளுஹரிலிருந்து எதிர்பார்த்திருப்பார்கள்.

  • குழப்பம் செய்ய முற்பட்டவர்கள் தோல்வியடைந்து கலைந்து சென்றார்கள்

    முகம்மத் இக்பால், சாய்ந்தமருது முசலி: சர்ச்சைக்குரிய வில்பத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணும்பொருட்டு குறித்த பிரதேசத்துக்கு சென்று பார்வையிடுமுகமாக தலைவர் ஹக்கீம் தலைமையில் இன்று காலை முசலி பிரதேசசபை மண்டபத்தில் அது பற்றிய கலந்துரையாடலுடன், விளக்க உரையும் இடம்பெற்றது. இதனை குழப்புவதற்கு அமைச்சர் ரிசாத்தின் ஆதரவாளர்கள் பலர் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வரவளைக்கப்பட்டிருந்தார்கள். பதற்ற நிலை ஒன்று உருவாக்கி இறுதியில் குழப்பம் செய்ய முற்பட்டவர்கள் தோல்வியடைந்து கலைந்து சென்றார்கள்.

  • மட்டக்களப்பில் ஹர்த்தால்

    மட்டக்களப்பு: தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளன. தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு

  • தாயும் மகளும் கிணற்றில் வீழ்ந்து மரணம்

    கெகிராவ – மரதன்கடவல பகுதியில் தாய் மற்றும் பிள்ளை கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 37 வயதான தாய் மற்றும் 6 வயதான பிள்ளை ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.

  • வியாழக்கிழமை ஹர்த்தால்: அனைத்து தரப்பினருக்கும் சம்பந்தன், ஹக்கீம், ரிஷாத் அழைப்பு

    யாழ்ப்பாணம்: காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின் பேரில் நாளைமறுதினம் வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் நடைபெறும் ஹர்த்தால் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அழைப்பு…

  • நீதிமன்றில் சரணடைந்தார் டில்ஷான்

    கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

  • “அமெரிக்க போர் கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்”

    “எதிரிகள் திரும்ப எழ முடியாத அளவு ராணுவம் இரக்கமற்ற அடியை கொடுக்கும்” பியொங்யாங்: கொரிய தீபகற்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை “மூழ்கடிக்க” வட கொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் போர் கப்பலான கார்ல் வின்சனை “ஒரே ஒரு அடியில் மூழ்கடித்துவிட முடியும்” என்ற எச்சரிக்கை நோடாங் ஷின்முன் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.

  • நீல நிறமாக மாறுகிறது பொலிஸாரின் சீருடை

    பண்டாரவளை: இலங்கையில் பொலீசாரின் சீருடையில் மாற்றங்களை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். பண்டாரவளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை அறிவித்தார்.

  • பெற்றோலிய ஒன்றியப் போராட்டம் கைவிடப்பட்டது

    கொழும்பு: திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கியமை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து, பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இன்று (24) அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

  • புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு

    பாலங்கொடை: பாலங்கொடை, கீழ் வலேபொட பிரதேத்தில் உள்ள காடு ஒன்றில் கிட்டத்தட்ட 100 அடி உயரத்திலான நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

  • லண்டனில் பலியான இலங்கை மருத்துவர்

    லண்டன்: லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் நிபுணத்துவ சங்கத்தின் துணைத் தலைவரும் வைத்தியருமான செஸ்மல் சிறிவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் மத்திய லண்டன் ஒக்ஸ்போர்ட் வீதியில் இடம்பெற்ற இரட்டைப் பஸ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

  • அமெரிக்க வான் பரப்புக்குள் நுழைந்த ரஷ்ய விமானங்கள்

    வோஷிங்டன் DC:  இரு ரஷ்யாவின் போர் விமானங்கள் அலஸ்கா கடற்கரையின் சர்வதேச வான் பகுதியில் வைத்து இடைமறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, பென்டகன் பேச்சாளர்களில் ஒருவரான கரி ரோஸ் ரஷ்யாவின் போர் விமானங்களை நாங்கள் தொழில்சார் மற்றும் பாதுகாப்பான முறையில் இடைமறித்ததாக தெரிவித்திருக்கிறார்.

←Previous Page
1 … 128 129 130 131 132 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar