“மூளைகெட்ட தேர்தல்”

  • இர்ஷாட் ஏ. காதர்

metta

காத்தான்குடி: இன்று (30) முகைதீன் மெத்தை பெரிய பள்ளிவாயல் நிர்வாக சபையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்று அப்பள்ளிவாயலில் இடம்பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு தற்பொழுது தேர்தல் மண்டபத்தை நோக்கி நகர்கின்றது.

அல்லாஹ்வின் இல்லத்தைப் பராமரிக்க அல்குர்ஆன் கூறுகின்ற நிபந்தனைக்குட்பட்டவர்களைத் தாண்டி, எல்லாத் தரப்பினரும் பதவியாசைக்காக குதித்திருக்கின்றனர்.

புதிய நிர்வாக சபைக்கான தேர்தலின் நோக்கம், வருடந்தோரும் புஹாரி ஓதப்பட்டு, சோறு வழங்கப்படல் வேண்டும்.

இதைவிட அனைத்து விடயங்களும் “சுன்னத் வல் ஜமாஅத்” என்ற அமைப்பிரின் கட்டுப்பாட்டிலேயே அன்றிலிருந்து இன்றுவரை சகல நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த வருடம் உத்தியோக பூர்வமாக புஹாரி ஓதப்பட்டும் விட்டது. இதற்கு மேல் வேறு என்ன “சுன்னத்தான அமல்” இந்தப் பள்ளிக்குத் தேவை?

காத்தான்குடியில் உலமாக்கள், கல்விமான்கள் மற்றும் சமூக சேவகர்கள் என்று பலர் இருக்கின்றபோது, நிர்வாகத் தெரிவை தேர்தலாக அறிமுகப்படுத்தியதன் “கள்ள “நோக்கங்களும் தற்பொழுது கசியத் தொடங்கி இருக்கின்றன.

“எனக்கு வாக்களியுங்கள், நான் ரொம்ப நல்லவன்” என்று முகநூலில் வாக்குப் பிச்சை நேற்று பலர் கேட்டு அலைந்ததையும் காணக்கூடியதாய் இருந்தது.

“காத்தான்குடிக்குரிய விவகாரம், ஏன் இவ்விவகாரத்தில் வக்பு சபை தலையிட வேண்டும்” எனவும்,

“ஜமாஅத்தார்கள் சேர்ந்து மெத்தைப் பள்ளியோடு தொடர்புடையவர்களை ஏன் நேரடியாகத் தெரிவு செய்யக்கூடாது” எனவும்

“மௌலவி அப்துர் ரஊப் தரப்பினரை உள்வாங்க இது அரிய தந்திரம்”

எனவும் மக்கள் ஆங்காங்கே பேசிக்கொள்கின்றனர்.

“இன்றைக்கு நேர காலத்டு கறியாக்கி, சாப்பிட்டு விட்டு ஊரே மெத்தைப் பள்ளியில் தான் நிக்கப்போகுது, பஸாரை மூடினாலும் மூடுவாங்க போலதான் தெரியுது வெட்டிப் பசங்க” என முதியவரொருவர் குறிப்பிடுகிறார்.

“தேர்தல் நடந்தாலும், தோத்தவன் தாங்கிக்க மாட்டான். இதனால சண்டை, அடிபிடி எழுந்தாளும் எழும்” எனவும்,

“இவங்களுக்கு ஐக்கிய நாடு சபை என்ற நினைப்பு, ஊரை ஆழ ‘வீட்டோ’ பவரு தேவை” எனவும்,

“மூளைகெட்டவனுகள், பள்ளி நிர்வாகத் தெரிவுக்கு எதற்கு தேர்தல்” எனவும் அப்பகுதி இளைஞர்கள் கூறிக்கொள்கின்றனர்.

எப்படியோ இந்தத் தேர்தல் எதைக் கொண்டுவரப்போகின்றது என்பதைக் காண காத்தான்குடி ஆவலோடு காத்திருக்கின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s