-
கேள்விக்குறியாகும் புதிய தலைமுறையினரின் எதிர்காலம்..!
அஷ் ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நளீமி இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்வு நெறி என்பதில் எல்லோரும் உடன்படுகின்றோம், எங்களுடைய நம்பிக்கை கோட்பாடுகளும், வணக்க வழிபாடுகளும் பெற்றுத் தருகின்ற ஆன்மீக பண்பாட்டு பக்குவங்கள் மானுட வாழ்வின் பல்வேறு அமசங்களையும் இறைவன் வகுத்த இயற்கை நியதிகளோடு இயைந்து செல்வதற்கு வழி செய்கின்றன.
-
போதைப்பொருள் கடத்தலுக்கு வர்த்தக அமைச்சு பயன்படுத்தப் படுகின்றதா?
முகம்மத் இக்பால், சாய்ந்தமருது அமைச்சர் ரிசாத் பதியுதீனின் வர்த்தக அமைச்சின்கீழ் உள்ள “சதொச” நிறுவனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து 16௦ கிலோகிராம் கொக்கெயின் ரக போதைப்பொருள் நேற்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பல நூறு கோடிகள் பெறுமதியுள்ள இந்த போதைப் பொருளானது அரசாங்கத்தின் சதொச நிறுவனத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலனில், சீனியை போன்று மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததையிட்டு, அந்த நிறுவன தலைவர் டி.எம்.கே.பீ. தென்னக்கோன் உற்பட அதிகாரிகள் பலரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும்…
-
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற இருக்கும் “தேசிய இஸ்லாமிய தினம்”
– பா.திருஞானம் கம்பளை: இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இஸ்லாமிய தின கலாச்சரா விழா கம்பளை சாஹிரா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் நவம்பர் மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்க்கொள்ளபட்டு வருகின்றன. இன்றைய தினம் மீலாத் நபி விழா தொடர்பாக நாடளாவிய ரீதியில் நடாத்தபட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படும்.
-
புதிய 10 பவுண்ட்ஸ்: மக்கள் அதிர்ச்சி
லண்டன்: பிரித்தானியாவின் பிரபல எழுத்தாளரான ஜேன் ஆஸ்டனின் 200வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியா வங்கி புதிய பத்து பவுண்ட் நோட்டை வெளியிட்டுள்ளது. ஆஸ்டனின் நினைவிடமான விஸ்டெஸ்டர் கதீட்ரலில் இங்கிலாந்து வங்கி கவர்னரான மார்க் கார்னி அவர்களால் புதிய நோட்டு வெளியிடப்பட்டது.
-
கத்தார் மீதான நிபந்தனைகளை கைவிட்டது சவுதி கூட்டணி
நியூயோர்க்: கத்தார் மீதான தடையை முன்னெடுத்துள்ள நான்கு அரபு நாடுகள், கடந்த மாதம் தாங்கள் வைத்த 13 குறிப்பிட்ட நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என மேற்கொண்டு வலியுறுத்தப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகல், கத்தார் தற்போது ஆறு முக்கிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
-
“இந்த பொண்ணு மிகவும் ஆபத்தானவள்”
ஹைத்ரபாத்: இந்திய அணியில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத வீரராக இருந்த இர்பான் பதான் தன் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர், “Kuch to log kahenge logo ka kaam hai kehna but always #love #travel” தன் மனைவியை “இந்த பொண்ணு மிகவும் ஆபத்தானவள்” என்று பதிவேற்றம் செய்திருந்தார். இதற்கு அவரின் மனைவி நஸ்ட்லீ
-
சுற்றுலா வந்த அயர்லாந்துப் பெண்ணுக்கு இலங்கையில் ஏற்பட்ட நிலை!
பண்டாரவளை: அயர்லாந்து நாட்டு பெண் ஒருவரை கடத்திச் செல்ல முயற்சித்ததாக கூறப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் தனது காதலனுடன் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், எல்ல பிரதேசத்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக கித்தல்எல்ல பிரதேச சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்தார்.
-
74 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட தம்பதியினரின் சடலம்
சூரிச்: சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைகளில் 75 ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன ஒரு தம்பதியரின் சடலங்கள், பனியாற்றின் அளவு குறைந்திருக்கும் நிலையில் தற்போது கிடைத்துள்ளன. மர்செலின் மற்றும் ஃப்ரான்சின் டுமெளலின் தம்பதிகள், 1942ஆம் ஆண்டு, வாலைஸ் கண்டோனில் மாடுகளை புல்வெளியில் வைத்து பால் கரக்க அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அவர்களை காணவில்லை.
-
போதைவஸ்தை பயன்படுத்திய மாணவர்கள் தங்களது கைகளை வெட்டிக்கொண்ட சம்பவம்
பொலன்னறுவை: மெதிரிகிரிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஒரு பாடசாலையில் 41 மாணவ, மாணவிகள் தமது கைகளை வெட்டிக் கொண்டிருந்த நிலையில் பொலிஸார் பொறுப்பேற்று பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். போதைப்பொருள் ஒன்றை பயன்படுத்திய மாணவர்கள் அதன் தாக்கத்தால், தமது கைகளில் பிளேட்டால் வெட்டிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
-
பொலித்தீன் பைகளுக்கு தடை: உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு
கொழும்பு: எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் தேதி முதல் பொலித்தீன் உற்பத்தி பொருட்களை பயன்படுத்த தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டிப்பதாக இலங்கை பொலிதின் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் அனுரா விஜேதுங்க, இந்த தீர்மானத்தை மீண்டும் மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.
-
கவர்ச்சியான ஆடை அணிந்த மகளுக்கு குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி கூறிய வார்த்தை..!
நிவ்யோர்க்: மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி, மகள், தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது. அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் வெளியிட்டுள்ளார்.
-
கத்தார் பால் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய மாடுகளை விமானத்தில் அனுப்பிவைத்த ஜேர்மனி!
டோஹா: கத்தாரில் பால் விநியோகத்தை அதிகரிக்க மாடுகள் விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்பட உள்ள 4000 மாடுகளில், முதல்கட்டமாக 165 ஹால்ஸ்டீன் பால் மாடுகள் ஜெர்மனியில் இருந்து கத்தார் வந்து சேர்ந்துள்ளன. கத்தாரில் வாழும் 2.7 மில்லியன் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நாடு இறக்குமதி பொருட்களை நம்பியிருக்கும் நிலையில், பிற நாடுகள் விதித்திருக்கும் வான், கடல் மற்றும் நில வழி தடையின் காரணமாக கத்தாரில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.