இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற இருக்கும் “தேசிய இஸ்லாமிய தினம்”

gampola– பா.திருஞானம்

கம்பளை: இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இஸ்லாமிய தின கலாச்சரா விழா கம்பளை சாஹிரா கல்லூரியில் ஜனாதிபதி தலைமையில் நவம்பர் மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்க்கொள்ளபட்டு வருகின்றன. இன்றைய தினம் மீலாத் நபி விழா தொடர்பாக நாடளாவிய ரீதியில் நடாத்தபட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படும்.

இது தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துறையாடல் ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்த கலந்துறையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்¸ இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவித்தான¸ கல்வி அமைச்சின் தமிழ்மொழி கல்வி அபிவிருத்தி பிரிவிற்கான பனிப்பாளர்¸ எஸ்.முரளிதரன்¸ முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் கிரேஷ்ட பனிப்பாளர் இசட். தாஜூடீன்¸ கம்பளை சாஹிரா கல்லூரியின் அதிபர் ஏ.எல்.சிராஜ்¸ பாடசாலையின் பகுதி தலைவர்கள்¸ கல்லூரியின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்¸ உட்பட பழைய மாணவர் சங்க செயலாளர்¸ உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

gampola

முஸ்லிம் மக்களின் தலைவருமான கம்பளை சாஹிரா கல்லூரியின் ஸ்தாபகருமான பதூர்தீன் முஹமட் அவர்களிளால் உறுவாக்கபட்ட இந்த சாஹிரா கல்லூரின் 75 வது வருட பூர்த்தியை முன்னிட்டு தேசிய இஸ்லாமிய தின கலாச்சரா விழா இந்த பாடசாலையில் நடாத்தவதற்கு நடவடிக்கள் மேற்க் கொள்ளபட்டு வருpன்றன.

தொடர்து இரண்டு நாட்கள் நடைபெரும் இந்த விழாவில் இலங்கை முஸ்லிம் மக்களின் கலை¸ கலாச்சார¸ பொருளாதாரம்¸ பண்பாடு அபிவிருத்தி ரீதியிலான நிகழ்வுகளும் பழைய மாணவர் சங்கத்தின் நடை பவணி¸ இலங்கை மற்றும் இந்திய பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளதுடன் நாட்டில் அனைத்து பாகங்களிலும் உள்ள இஸ்லாமிய பெரியார்கள்¸ அமைச்சர்கள்¸ பாராளுமன்ற¸ மாகாண சபை உறுப்பினர்கள்¸ உட்பட பலர் கலந்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்க் கொள்ளபட்டுள்ளன. இரண்டாம் நாள் நிகழ்வுக்கு ஜனாதிபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொள்வார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s