WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கலாநிதி பட்டம் பெற்ற அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் நளீமி அல் பஜ்ர் நலன்புரி அமைப்பினால் கௌரவிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவரும், அவுஸ்திரேலியாவின் கென்பரா பல்கலைக்கழகத்தில் கணனி முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம் பெற்ற ‘த ஹெவன் குறூப்’ நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் பணிப்பாளருமான கலாநிதி அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் நளீமிக்கான கலாநிதி கௌரவிப்பு நிகழ்வு அல் பஜ்ர் நலன்புரி அமைப்பினால்  வியாழக்கிழமை (28) இரவு மஞ்சந்தொடுவாய் விம்பில்டன் ஆங்கில பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

  • 53 மில்லியன் டொலருக்கு விலைபோன உலகின் இரண்டாவது பெரிய வைரக்கல்

    SHM லண்டன்: உலகின் இரண்டாவது பெரிய வைரம் லண்டனில் உள்ள நகை வியாபாரியிடம் 53 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அதற்கு ஏற்ற விலைகிடைக்காத நிலையில் கிராஃப் வைரங்கள் நிறுவனத்தின் இயக்குநரான லோரன்ஸ் கிராஃப் தனிப்பட்ட முறையில் இந்த வைரத்தை வாங்கியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொஸ்ட்வானாவில் லுக்காரா டைமண்ட் கோப்ரேஷன் இந்த 1,111 கரட் வைரத்தை தோண்டி எடுத்தது.

  • மஹிந்தவுக்கு சு.க. தலைமை பொறுப்பு கோரிய மனு தள்ளுபடி

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, மீண்டும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. குறித்த மனு இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அதனை பிரதான மாவட்ட நீதவான் சுஜீவ நிஸ்ஸங்க தள்ளுபடி செய்தார்.

  • புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கைசாச்த்து

    பா.திருஞானம் புஸ்ஸல்லாவ: மலையத்தில் காணப்படும் பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் (950 இலட்சம்) ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஓப்பந்தம் ஒன்று கைசாத்து நேற்று (28.09.2017) கொழுப்பு இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் நடைபெற்றதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்  தெரிவித்தார்.

  • பிரதமருக்கு முஸ்லிம் கவுன்சில் கடிதம்

    கொழும்பு: இலங்கையில் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்ட இடத்தை முற்றுகையிட்ட பௌத்த துறவிகள் உள்ளிட்ட கடும் போக்கு பௌத்தர்கள் சகல அகதிகளையும் கொல்லுமாறு மூத்த போலிஸ் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் அச்சுறுத்தல் விடுத்ததாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கூறுகின்றது. ஶ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவரான என்.எம். அமீன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

  • கூச்சல் குழப்பத்துடன் முடிந்த கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு

    திருகோணமலை: பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு அமளி துமளியுடன் முடிவடைந்தது.  சனிக்கிழமை (30) நள்ளிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைகின்றது. வியாழக்கிழமையும்  வெள்ளிக்கிழமையும் 86-வது அமர்வு நடைபெறும் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் வியாழக்கிழமையுடன் (28) இறுதி அமர்வு முடிவடைந்தது.

  • ரொஹிங்யா முஸ்லிம்களை தத்தெடுக்கலாமா..?

    – MJ கொழும்பு: இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்ததன்பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்துவரும் ரொஹிங்யா முஸ்லிம்கள் மீது பௌத்த தீவிரவாத அமைப்பினர் நேற்று மேற்கொண்ட மனிதாபிமானமற்ற செயற்பாட்டின் பின்னர் ரொஹிங்யா அகதிகள் மீது இலங்கை மக்களின் அனுதாபங்கள் மேலும் அதிகரித்திருக்கின்றன.

  • அத்தியாவசிய உணவு பொருட்களை தவிர இறக்குமதிக்கு தடை

    களுத்துறை: அத்தியாவசிய உணவு பொருட்கள் தவிர ஏனைய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை ஆண்டுதோறும் 25 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதி செலவிட்டு வருவதாக தெரிவித்தார்.

  • வித்தியா கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை (முழு விபரம்)

    யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் 7 எதிரிகளுக்கு ட்ரையல் எட் பார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வன்புணர்வு, கொலைச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி நடந்தது. தண்டனை பெற்றவர்களில் இவ் வன்புணர்வுக் கொலையின் சூத்திரதாரியாகிய சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • “கல்முனை மாவட்ட யோசனையை சேர்க்காவிட்டால் பதவியை தூக்கி எறிவேன்” – பிரதி அமைச்சர் ஹரீஸ்

    அகமட் எஸ். முகைடீன் கொழும்பு: கிழக்கிலுள்ள மூவின மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலுக்கட்டாயமாக பாராளுமன்றத்தின் ஊடாக வடக்கு, கிழக்கை இணைக்க முயற்சிக்கிறது. இந்த துரோகத்திற்கு கிழக்கில் மட்டுமன்றி நாடு பூராகவுமுள்ள எந்த முஸ்லிமும் துணைபோக மாட்டார்களென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

  • குறைந்த கார்போஹைட்ரேட் உணவை உண்பதற்கான வழிமுறை

    ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆகவே உடல் எடை குறைப்பிற்காக அல்லது உடல் வடிவ மாற்றத்திற்காக டயட் இருக்க நினைப்பவர்கள் அவர்களின் உடல் நிலைக்கேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி டயட்டை ஆரம்பிக்க வேண்டும். லோ கார்போ டயட் என்னும் குறைந்த கார்போ ஹைட்ரட் உணவுகளை எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள் கீழே கூறப்பட்டிருக்கும் முறைகளை பின்பற்றலாம்.

  • லண்டனில் வாகனங்களை இயக்கும் உரிமையை இழந்தது ஊபர்

    லண்டன்: லண்டனில் ஊபர் தனியார் வாடகைக் கார் நிறுவனம் வாகனங்களை தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என லண்டன் போக்குவரத்துக்குப் பொறுப்பான டி.எல்.எஃப் தெரிவித்துள்ளது. இந்த பயண செயலி நிறுவனம், தனியார் வாகன சேவையை நடத்த தகுதியற்றது என டிஎல்எஃப் கூறியுள்ளது.

←Previous Page
1 … 109 110 111 112 113 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar