புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கைசாச்த்து

  • பா.திருஞானம்

pussallawaபுஸ்ஸல்லாவ: மலையத்தில் காணப்படும் பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் (950 இலட்சம்) ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஓப்பந்தம் ஒன்று கைசாத்து நேற்று (28.09.2017) கொழுப்பு இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் நடைபெற்றதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்  தெரிவித்தார்.

இந்த ஓப்பந்தம் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித்சந்து அவர்களுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் சுணில் ஹெட்டியாராச்சிக்கும் இடையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் இராதாகிருஸ்ணன் திவாகரன் உதவி இந்திய உயர் ஸ்தானிகர் கல்வி அமைச்சின் பாடசாலைகளின் கட்டட அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி அபேசுந்தர பிரதான கணக்காளர் ஜயசேகர ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருந்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்கள். இந்த பாடசாலை ஒரு மாகாண பாடசாலையாகும் இதற்கான அபிவிருத்திகள் அனைத்தும் மாகாண சபையின் ஊடாக நடைமுறைபடுத்த வேண்டும் இந் நிலையில் இந்த பாடசாலைக்கு இந்திய உதவியின் மூலம் 95 மில்லியன் (950 இலட்சம்) ரூபா நிதி கிடைப்பதற்கான முடிவு இந்திய அரசினால் எட்டபட்ட போது இதற்கான வற் வரியினை மத்திய மாகாணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் பெரும் தொகையான வற் வரியை மாகாண சபைக்கு கட்ட முடியாது என்று மத்திய மாகாண சபை கையை விரித்து விட்டது. இதனால் இந்த பணம் மீண்டும் இந்திய அரசிற்கு செல்லும் நிலை ஏற்பட்ட வேலையில் அதிபர் அடங்களாக பாடசாலையின் பழைய மாணவர்களும். பெற்றோர் அபிவிருந்தி சங்க உறுப்பினர்களும் என்னிடம் ஓடி வந்தார்கள். பின் எனது அமைச்சின் செயலாளர்களையும் அதிகாரிகளையம் அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி கல்வி அமைச்சின் மூலம் வற் வரியை செலுத்த முடிவு எட்டபட்டது.

அதன் பயனாக திரைசேரியின் அனுமதியும் பாராளுமன்ற அமைச்சரவையின் அங்கிகாரமும் பெறபட்டு கல்வி அமைச்சின் செயலாளர் சுணில் ஹெட்டியாராச்சி அவர்களுக்கும் தற்போதய இலங்கைக்கான இந்திய துர்துவர் இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் கைசாத்து இடபட்டது. இந்த பணத்தின் மூலம் அபிவிருத்திகள் அனைத்தும் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையில் மத்திய மாகாண சபையினால் மேற்க் கொள்ளபடும் என்று கூறினார்.

1932ம் ஆண்டு மலையகத்தின் தலைவர்களான அமர் கே.ராஜலிங்கம் அவர்களின் முயற்ச்சியில் அமர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் உதவியுடன்; ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை பல புத்திஜீவிகளை உருவாக்க காரணமாக இருந்துள்ளது. இவ்வாறான நிலையில் தற்போது இந்த பாடசாலைக்கான அளவிடும் வேலைத்திட்டங்கள்¸ கட்டட வரையுகள்¸ காணி பெறல்¸ காணி அளத்தல் போன்றன நடைபெற்று வரும் அதே வேலை அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைதிட்டத்தின கீழ் “ஏ” பிரிவிலும் மேலும் அபிவிருத்தி செய்யபட்டு வருகின்றது.கல்வி அமைச்சின் பொறியியலாளர்கள் குழு ஒன்று பாடசாலைக்கு விஜயம் ஒன்றினையும் மேற்க் கொண்டிருந்தனர்

pussallawa

மேற்படி பாடசாலை இலங்கை இந்திய வரலாற்றில் முக்கியத்தவம் பெற்ற ஒரு பாடசாலையாகும் முன்னால் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் அவர்களின் தாத்தா இலங்கைக்கான இந்திய துர்துவராக முன்னர் இலங்கையில் இருந்துள்ளார். இந்த காலப்பகுதியில் இவரை பாடசாலைக்கு அமர் பாராளுமன்ற உருப்பினர் கே.ராஜலிங்கம் அவர்களினால் நிகழ்வு ஒன்றுக்கு அழைக்கபட்டார். அப்போது அவர் தனது மனைவியுடன் வருகை தந்திருந்தார். அன்றய தினம் அவரது மனைவியின் பிறந்த தினம். இதை அறிந்த அமர் பாராளுமன்ற உருப்பினர் கே.ராஜலிங்கம் இவருக்கு பரிசாக ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என்பதற்காக அவரின் பெயரான “சரஸ்வதி” என்ற பெயரை இந்த பாடசாலைக்கு சூட்டினார். இதற்கு முன்னர் இந்த பாடசாலையின் பெயர் “பசுபதி” வித்தியாலயம் என காணப்பட்டது.

இந்த வரலாற்று முக்கித்துவதை கண்டியில் இருந்த இந்திய உதவி உயர் ஸ்தானிகராக இருந்த ஏ.நடராஜன் அவர்களிடம் தற்போதய அதிபர் அடங்களாக பாடசாலையின் பழைய மாணவர்களும். பெற்றோர் அபிவிருந்தி சங்க உறுப்பினர்களும் கண்டி தமிழ் வர்த்தகர்களும் கூறியதன் பயனாக இந்த விடயம் முன்னால் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் அவர்களுக்கு அறிவிக்கபட்டது. இதன் பின்னர் இவரின் உத்தவிற்கு அமைய முன்னால் இலங்கைக்கான இந்திய துர்துவர் வை.கே.சிங்ஹா இந்த பாடசாலைக்கு விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டு பார்வையிட்டு அபிவிருத்திகள் தீர்மாணிக்கபட்டு மேற்படி உதவு தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்க் கொள்ளபட்டது. இதுவே இந்த பாடசாலையின் அபிவிருத்திக்கு முக்கிய காரணமாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s