ரொஹிங்யா முஸ்லிம்களை தத்தெடுக்கலாமா..?

Rohingya-refugees– MJ

கொழும்பு: இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்ததன்பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்துவரும் ரொஹிங்யா முஸ்லிம்கள் மீது பௌத்த தீவிரவாத அமைப்பினர் நேற்று மேற்கொண்ட மனிதாபிமானமற்ற செயற்பாட்டின் பின்னர் ரொஹிங்யா அகதிகள் மீது இலங்கை மக்களின் அனுதாபங்கள் மேலும் அதிகரித்திருக்கின்றன.

இந்நிலையில் இந்த பௌத்த அமைப்பிற்கு எதிராக கதிரைக்குச் சோரம்போகும் முஸ்லிம் அரசியல் வர்த்தகர்களால் உறுப்படியான எந்த நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ள முடியாத நிலையில், நாங்கள் ஜனாதிபதியிடம் பேசியுள்ளோம் என சிலர் நேற்று ரீல்விட்டிருந்தனர். உன்ட வேலையைப் பாரு என ஜனாதிபதி கூறி தொலைபேசியைத் துண்டித்திருப்பாரே தவிர, வேறென்னத்த அவரால் செய்ய முடியும்? என்றே என்னத் தோன்றுகிறது.

இந்நிலையில் இந்த மக்களுக்கு தாங்கள் ஆதரவளிக்கத்தயார் என்றும், இவர்களைத் தத்தெடுக்கவும், பராமரிக்கவும் தயார் எனவும் முகநூலில் பலர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

Rohingya-refugees

1951ம் ஆண்டு ஐ.நா சபையின் அகதிகளுக்கான UNHCR ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திடவில்லை. இதன்காரணமாக அகதிகளை ஏற்பது அவர்களுக்கு வாழ்வாதார உரிமை வழங்குவது போன்றவற்றைச் செய்வதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லை.

தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு தற்காலிகப் பராமரிப்பின் பின்னர், இவர்கள் மீண்டும் சொந்த நாட்டிற்குத் திரும்பி அனுப்பப்படுவர். தற்பொழுது இந்த அகதிகள் UNHCR அமைப்பின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.
ரொஹிங்யாவிற்கு இவர்களை மீண்டும் திருப்பி அனுப்ப முடியாத நிலை தொடருமிடத்து, 1951 அகதிகள் விவகார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் ஏதாவதொரு நாட்டிற்குள் இவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதைவிட இலங்கையில் இவர்களைத் தத்தெடுப்பதற்கு அல்லது பராமரிப்தற்கு சட்டம் இடமளிக்காது.

இவ்வகதிகளுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன், பௌத்த தீவிரவாதிகளிடமிருந்து இவர்களைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் அரசாங்கத்தையும் UNHCR அமைப்பையும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s