-
பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவரும், அவுஸ்திரேலியாவின் கென்பரா பல்கலைக்கழகத்தில் கணனி முகாமைத்துவத்தில் கலாநிதி பட்டம் பெற்ற ‘த ஹெவன் குறூப்’ நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் பணிப்பாளருமான கலாநிதி அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் நளீமிக்கான கலாநிதி கௌரவிப்பு நிகழ்வு அல் பஜ்ர் நலன்புரி அமைப்பினால் வியாழக்கிழமை (28) இரவு மஞ்சந்தொடுவாய் விம்பில்டன் ஆங்கில பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.கே.பளீலுர் ரஹ்மான் ஜேபி தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலாநிதி கௌரவிப்பு நிகழ்வில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி அப்துல் கையூம் (ஷர்கி) உட்பட ஊர் பிரமுகர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் ,உலமாக்கள் அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கலாநிதி அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் நளீமி அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அதிதிகளினால் விருது வழங்கி பாராட்டி கெரவிக்கப்பட்டார்.
இங்கு அஷ்ஷெய்க் எஸ்.ஏ.கே. அப்துர் ராசிக் நளீமி விஷேட உரையை நிகழ்த்தினார்.
இதில் கலாநிதி அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் நளீமி தொடர்பான அறிமுகத்தினை அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் தஃவாப் பிரிவு பொறுப்பாளர் மௌலவி உவைஸ் (பலாஹி) வழங்கினார்.
குறிப்பு இங்கு கலாநிதி கௌரவம் வழங்கப்பட்ட கலாநிதி அஷ்ஷெய்க் அறூஸ் ஷரீப்தீன் நளீமி அல் பஜ்ர் நலன்புரி அமைப்பின் ஆலோசகரும், உறுப்பினரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply