கொழும்பு: தற்பொழுது சந்தையிலுள்ள மெகீ நூடில்ஸ் உட்பட உடனடியாகத் தயாரிக்கக் கூடிய அனைத்துவகை நூடில்ஸ்களையும் பகுப்பாய்வு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரசாயனப் பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப் படும் நூடில்ஸ்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்பட்டால்
அந்த உற்பத்திகள் உடனடியாக நாட்டில் தடைசெய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்தார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்துவகை நூடில்ஸ் மாதிரிகளையும் தொழில்நுட்ப நிறுவன ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எமது நாட்டில் குழந்தைகள் உட்பட அதிகமானோரின் விருப்பத்துக்குரிய உணவு வகையாக நூடில்ஸ் மாறியிருக்கும் நிலையில் இந்தியாவில் நூடில்ஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனூடாக பல்வேறுபட்ட நோய்கள் தொற்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா என்பதை கவனிப்பதுடன், விசேடமாக அவற்றில் அடங்கியுள்ள சுவையூட்டிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் உடலுக்கு தீங்குவிளைவிக்கக் கூடியனவா என்பதைக் கண்டறியும் நோக்கிலேயே இந்தப் பகுப்பாய்வுகள் செய்யப்படவுள்ளன.
இதன்படி சந்தையிலுள்ள மெகீ நூடில்ஸ்களின் மாதிரிகள் தொழில்நுட்ப நிறுவன ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக் கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Published by


Leave a comment