ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கு பங்களாதேஷ் தகுதி

bangladeshடாக்கா: ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப் படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது. போட்டியை நடத்தும் நாடு மற்றும் செப்டம்பர் மாத நிலவரப்படி தரவரிசையில் சிறந்த நிலையில் உள்ள முதல் 7 அணிகள் என்று மொத்தம் 8 அணிகள் மட்டுமே இந்த போட்டிக்கு தகுதி பெற முடியும்.

தற்போதைய இந்தியாவுக்கு எதிரான வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி (93 தரவரிசை புள்ளிகளுடன் 7-வது இடம்) சம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதற்கான போதுமான தரவரிசை புள்ளிகளை எட்டி விட்டது.

பங்களாதேஷ் அணி சம்பியன்ஸ் கிண்ணத்துக்கு தகுதி பெற்றிருப்பது உறுதியாகி இருப்பதன் மூலம் மேற்கிந்தியதீவு அல்லது பாகிஸ்தான் ஆகிய முன்னணி அணிகளில் ஒன்று வாய்ப்பை இழக்க நேரிடும்.

Published by

Leave a comment