Author: yourkattankudy.com
-
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால பதவி ஏற்றார்
கொழும்பு: இலங்கையின் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நீதியரசர் கே. ஸ்ரீபவன் முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்தார்.
-
இலங்கையின் புதிய ஜனாதிபதி மாலை 6.21 மணிக்கு பதவியேற்கிறார்
கொழும்பு: இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.21 மணிக்கு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் மைத்ரிபால சிறிசேன இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார். யார் மனமும் புண்படாத வகையில் தனது வெற்றியை கொண்டாட வேண்டுமென்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
எமது அழைப்பையேற்று வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் – NFGG
– NFGG ஊடகப்பிரிவு கொழும்பு: நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுபட்டு மைத்திரியை ஆதரித்த அனைவருக்கும் நல்லாட்சிக்கானதேசிய முன்னணி தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது. குறிப்பாக பல சவால்களுக்கு மத்தியில் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்த பெண்கள் வயோதிபர்கள் மாற்றுத்திரனாளிகள் ஆகியோருக்கு விசேட நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
-
எமது வெற்றியை தௌபா செய்து கொண்டாடுவோம் பொறியிலாளர் சிப்லி பாறூக் இன் விசேட உரை இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்
காத்தான்குடி: அன்பு சகோதர சகோதரிகளே. அல்லாஹ்வின் உதவியை கொண்டு நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.
-
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு.
நிறைவேற்று அதிகார ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை ஏற்படுத்த நாம் முன்னெடுத்த போராட்டத்தில் என்னோடு கூட்டுத் சேர்ந்த அரசியல் கட்சிகள்,அதன் தலைமைகள்,என் உயிரிலும் மேலான நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலில் தனது நன்றிகளை
-
தேர்தல் தோல்வி: மஹிந்த அலரிமாளிகையிலிருந்து தற்போது வெளியேறியுள்ளார்
கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.
-
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதி முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன: 44,485 மஹிந்த ராஜபக்ஸ: 8,216
-
திருகோணமலை மாவட்டம் சேறுவில தேர்தல் தொகுதி முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஸ: 26,716 மைத்திரிபால சிறிசேன: 24,833