கொழும்பு: மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் கொகா கோலா நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் தொடர்ந்தும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொகா கோலா நிறுவனத்தின் கடுவெலை பிரதேச தொழிற்சாலையின் சுரங்க வழி எண்ணெய் விநியோகக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக களனி கங்கையில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவினால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கசிவு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இந்த இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் என மத்திய சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதிகார சபையின் ஊடக பிரதி பணிப்பாளர் சுனில் உடுகுல தெரிவிக்கையில், “குறித் நடவடிக்கை தொடர்பில் உரி நடவடிக்கையை அவர்கள எடுக்கும் வரை, அவர்களது நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
கடந்த வாரம் கொகா கோலா நிறுவனம் அமெரிக்க அரசின் அதிகாரிகளினூடாக, குறித்த அனுமதிப்பத்திரத்தை மீள்வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த எண்ணெய்க் கசிவுகள் ஏற்பட்டதன் மூலம் சூழல் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்த ஆதாரங்கள் உள்ளதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பில் அதிகார சபையின் கம்பஹா மாவட்ட அலுவலகத்தினால் குறித்த பகுதியில் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் நீர்வழங்கல் அதிகார சபையால் குறிப்பிட்ட பிரதேசத்தில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டு குறித்த நீரை மக்கள் பாவனையிலிருந்து தடுக்கப்பட்டதோடு, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் நீரியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையுடள் இணைந்து குறித்த நீர் சுத்தம் செய்யப்பட்டு எண்ணெய் உறிஞ்சப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
Published by

Leave a comment