அரசியல்வாதிகளுக்கு இனி இராணுவப் பாதுகாப்பு இல்லை

army presidential securityகொழும்பு: இலங்கையில் எந்த அரசியல்வாதிகளுக்கும் இனி இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இன்று தெரிவித்துள்ளார். மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவே இராணுவம், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்க அல்ல என அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது நாட்டில் பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில் பாதுகாப்பு அமைச்சரின் இந்த கருத்து வந்துள்ளது.

army presidential security

மஹிந்த ராஜபக்ஷவை பழிங்வாங்குவதற்கோ அல்லது அவரை அவமானப்படுத்தும் நோக்குடனோ அவருக்கான இராணுவ பாதுகாப்பு அகற்றப்படவில்லை எனவும் அமைச்சர் ருவன் விஜேவர்தன விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சர் உட்பட முக்கியஸ்தர்களும் சாதாரண பொலிஸ் பாதுகாப்புத்தான் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Published by

Leave a comment