Day: July 15, 2014
-
‘கிஸ்வா’ பற்றி நாம் அறியாதவை: விபரங்களும் கானொளிகளும்
– MJ மக்கா: அல்லாஹ்வின் புனித ஆலயத்திலிருக்கும் அல்லாஹ்வின் வீட்டை (பைத்துல்லாஹ்-கஃபா) மேலால் போர்த்தப்படும் ஆடைக்கு ‘கிஸ்வா’ என அழைக்கப்படுகிறது. இந்த கிஸ்வா தயாரிப்புக்கு 22 மில்லியன் சவுதி றியால்கள் செலவாகின்றன. இரு ‘ஹரங்களினதும் காவலன்’ என அழைக்கப்படும் மன்னர் அப்துல்லாஹ்வின் பொருப்பின் கீழ் இந்த ‘கிஸ்வா’ ஆடையும் உள்ளடங்குகின்றன.
-
நன்றி தெரிவிக்கிறார் இல்மி அஹமட் லெவ்வை
– FM. பர்ஹான் காத்தான்குடி: கடந்த 6/7/ 2014 அன்று காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் இளம் விதவைகள் மற்றும்விசேட தேவையுடையோருக்கான ரமழான் உலர் உணவு வழங்கும் நிகழ்வு காத்தான்குடிஅன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் அமைப்பினது தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் பெருந்திரளான அதிதிகளின் வருகையோடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
-
மட்டக்களப்பு சிறைச்சாலையில் முஸ்லிம் கைதிகளுக்கான இப்தார் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு சிறைச்சாலையில் நோன்பு நோற்றுவரும் முஸ்லிம் கைதிகளுக்கான இப்தார் நிகழ்வு கடந்த13-07-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றது.
-
‘திருமலை மாவட்ட ஊடகவியலாளர் அமைப்பு கிழக்கு மாகாணத்தின் சமாதானத்திற்காகவும் இன ஒற்றுமைக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவது பாராட்டிற்குரியது’
– பஹ்மியூஸூப் திருகோணமலை: ‘கிழக்கு மாகாணத்தில் கடந்த 3 தசாப்த காலமாக நிலவிய யுத்த சூழ்நிலையிலும் திருமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சமாதானம் உருவாதற்கும் இன ஒற்றுமைக்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதையிட்டு நான் கிழக்கு மாகாண மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன்’ என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
-
தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ சமயத்தவர்கள் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க மாபெரும் இப்தார் நிகழ்வு!
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ ஆகிய மதத்தவர்கள் கலந்து கொண்ட மாபெரும் சமூக நல்லிணக்க இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு 15.07.2014 இன்று செய்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு சின்ன உப்போடை ‘ஈஸ்ட் லகூன்’ நட்சத்திர ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
-
ஆப்கானிஸ்தானில் மிகப்பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் 89 பொதுமக்கள் பரிதாபகமாக பலி!
– MJ காபூல்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு மானிலத்தில் பரம ஏழைகள் வாழும் உர்குன் நகரின் பிரபல்யமான சனநெருக்கல் மிக்க சந்தைப் பகுதியல் இன்று மேற்கொள்ளப்பட்ட சக்திவாயந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 89 பேர் பரிதாகபமாகக் கொல்லப்படட்னர்.
-
‘இஸிஸ்’ அமைப்பில் இணைந்துள்ள இந்திய மாணவர்கள்: அதிர்ச்சியில் இந்தியா!
– AF-90 மும்பை: ஈராக்கில் இஸிஸ் (ISIS) போராளிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த 18 பேர் இணைந்துள்ளதாக செய்திகள் கூறும் நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நான்கு பேரை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
-
எகிப்தின் போர்நிறுத்த யோசனை: ஹமாஸ் நிராகரிப்பு!
கெய்ரோ: காசாவிலுள்ள பலஸ்தீன் பொதுமக்கள் மீது கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்துள்ள யோசனையை பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இஸ்ரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
-
‘ஞானசார தேரர் புனித குர் ஆனைப் பற்றி கூற அருகதையற்றவர்’ – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்
– பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: பௌத்த மத போதனைகளை விளங்கத்தெரியாத பொதுபல சேனாவின் செயலளார் ஞானசார தேரர் புனித குர் ஆனைப் பற்றி கூற அருகதையற்றவர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் தெரிவித்தார்.
-
‘ஸகாதுல் ஃபித்ர்’ சம்பந்தமாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம்
பெரிதாகப் பார்ப்பதற்கு துண்டுப்பிரசுரத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.
-
“தோப்பூர் நாவற்கேணிக்காடு பகுதி மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைஅனுமதிக்க முடியாது.” நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
– PMGG ஊடகப்பிரிவு தோப்பூர்: “பரம்பரை பரம்பரையாக தோப்பூர் நாவற்கேணிக்காடு-நீனாகேணி பகுதியில் வசித்து வரும்மக்களை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அப்பட்டமான அநீதியாகும். மனிதபிமானமுள்ள எவராலும் இதனை ஏற்றுக் கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாது” என PMGG வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கையில் 6000 பேருக்கு உலருணவுப் பொதி வழங்கும் திட்டத்தில் – உலமாக்கள் 300 பேருக்கு காத்தான்குடியில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மனிதவள அபிவிருத்திக்கான சர்வதேச அமைப்புடன் இணைந்து ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் மற்றும் அல் மனார் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் றமழான் மாத நோன்பை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் 6000 பேருக்கு உலருணவுப் பொதி வழங்கும் திட்டத்தில் காத்தான்குடி கதீப்மார்,இமாம்கள் சம்மேளனம் விடுத்த வேண்டுகோளின் பேரில் கதீப்மார்,பேஷ் இமாம்கள்,