ஆப்கானிஸ்தானில் மிகப்பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் 89 பொதுமக்கள் பரிதாபகமாக பலி! 

afghan– MJ

காபூல்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு மானிலத்தில் பரம ஏழைகள் வாழும் உர்குன் நகரின் பிரபல்யமான சனநெருக்கல் மிக்க சந்தைப் பகுதியல் இன்று மேற்கொள்ளப்பட்ட சக்திவாயந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 89 பேர் பரிதாகபமாகக் கொல்லப்படட்னர்.

புனித ரமழான் மற்றும் ரமழான் பெருநாளுக்கான பொருட் கொள்வனவு செய்துகொள்ளும் முகமாக பொதுமக்கள் இச்சந்தையில் நிறைந்து காணப்பட்ட வேளையிலேயே இந்த தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.

‘இக்குண்டு வெடிப்பின் காரணமாக 20 கடைகளும் இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களும் அழிந்து போயிருப்ப’தாக ஜென. முகம்மட் ஸாஹிர் அஸ்மி தெரிவித்தார்.

afghan

‘இவ்வாறான அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்பதாகவும், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பரம ஏழைகள்’ எனவும் உர்குன் நகர அதிகாரி முகம்மட் ரீஸா கவலை தெரிவித்தார்.

இத்தாக்குதலுக்கு இதுவரைக்கும் எவரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment