காத்தான்குடி: கடந்த 6/7/ 2014 அன்று காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் இளம் விதவைகள் மற்றும்விசேட தேவையுடையோருக்கான ரமழான் உலர் உணவு வழங்கும் நிகழ்வு காத்தான்குடிஅன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் அமைப்பினது தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் பெருந்திரளான அதிதிகளின் வருகையோடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்வு சிறப்புடன் நிறைவடைய பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த கௌரவ உற்பத்தி திறண் மேம்பாட்டு அமைச்சர் அல்ஹாஜ் பசீர்சேகு தாவூத் உற்பட காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் AC.அஹமது அப்கர், அம்பாறை உதவி பிரதேச செயலாளர் TM.அன்சார், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களான CMM. மன்சூர், AL.சிஸாத், முன்னாள் காதி நீதிபதி பன்நூல் ஆசிரியர் MMM.மஹ்றூப் கரீம் MA, ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலை முகாமையாளர் MHAM. இஸ்மாயில் (SLEAS) மற்றும் சங்கைகக்குரிய உலமாக்கள்,பள்ளிவாயல்களின் தலைவர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள் ,மதிப்புக்குரிய ஆசிரியர்கள் பொது நிறுவனங்களின் தலைவர்கள்,அறபுக்கல்லூரிகளின் பணிப்பாளர்கள் கல்விமான்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள்,திணைகள தலைவர்கள். மற்றும் ஊரின் முத்த தலைவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் எமது வறிய மக்களது துயர் துடைகின்ற சமூகத்தை நோக்கிய இப் பயணத்தக்கு அழ்ழாஹ்வினது எதிர்பார்பை மாத்திரம் இலக்காக ஏற்று அச்சாணியாக இருந்து அனுசரணை உதவிகளை வழங்கிய மதிப்புக்குரிய தனவந்தர்கள் அத்துடன் இவ்விழாவின் சிறைப்புரையை நிகழ்திய முன்னாள் காதி நீதிபதி MMM. மஹ்றூப் கரீம் MA, எமது செயற்பாடுகளை உலகறியச்செய்து எம்மை உற்சாகப்படுத்துகின்ற ஊடக உறவுகள் மற்றும்
பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்த காத்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாணவர் நிகழ்ச்சியை நடாத்திய மீராபாலிகா தேசிய பாடசலை மாணவியர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அமைப்பினது தலைவர் இல்மி அகமட் லெவ்வை தெரிவித்தார்.
Published by

Leave a comment