ஸ்மார்ட்போன் வெடித்து அதிகாரி ஹஷன் பரிதாப பலி.!

phoneகோலாலம்பூர்: மலேசிய நிதியமைச்சகத்துக்கு சொந்தமான கிராடில் பண்ட் என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி நஸ்ரின் ஹாஷன் என்பவர் ஆவார். மேலும் அதிகாரி நஸ்ரின் ஹாஷன் ஹூவாய் மற்றும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று படுக்கையறையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்றார் நஸ்ரின் ஹாஷன், அந்த சமயம் ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து சிதறியது, இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டு உயிரழந்தார். மேலும் படுக்கையில் அதிகமாக தீப்பற்றி எரிந்தது.

மேலும் அவரது உறவினர்கள் தெரிவித்தது என்னவென்றால் படுக்கையறையில் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் போட்டிருந்தார், அது திடீரென வெடித்து அவர் மண்டையில் தாக்கியதால் அவர் உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளனர். பின்பு படுக்கையறை தீப்பிடித்து எரிந்துள்ளது, ஆனால் தீப்பிடிக்கு முன்பே அவர் இறந்துவிட்டதால், அவரால் வெளிவர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஸ்மார்ட்போன் வெடித்து காயம் ஏற்பட்டு அதன் காரணமாக தான் உயிரிழந்துள்ளதாக அவரது பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

phone
yourkattankudy/phonehazards

மேலும் 2016-ஆம் ஆண்டு ஆன்டாரியோ பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் உறங்கி கொண்டிருந்த போது தனது சாம்சங் கேலக்ஸி ஏஸ் போன் வெடித்து சிதறியதாக கூறியுள்ளார். இந்நிகழ்வு அக்டோபர் மாதம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

தெர்மல் ரன் அவே லித்தியம் பேட்டரிக்களுக்கு உள்ள பிரச்சனையை தெர்மல் ரன் அவே என்று அழைக்கின்றனர். இந்த வகை பேட்டரிகள் அதிகபடியான வெப்பம் அளிக்கும். இந்த பிரச்சனையால் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் பேட்டரிக்களை பாதுகாக்கவும், அதிக படியான சார்ஜிங்கை நிறுத்துவதற்கும் வழி முறைகளை கண்டுபிடித்துள்ளனர்.

phone hazard
yourkattankudy/phonehazards

தற்பொழுது தட்டையான மெல்லிய ஸ்மார்ட் போன்கள் வருவதால் அவைகளுக்கு ஏற்ற மெல்லிய பேட்டரிக்களும் வருகின்றன. இதனால் positive மற்றும் negative தட்டுகளை தனிதனியாக வைக்க இடம் இருப்பதில்லை. இவைகளுக்கு இடையில் ஏதாவது நுழைந்தால் பிரச்சனைதான். அதிலும் தேவையான தரம் இல்லாத பேட்டரி என்றால் முற்றிலும் மோசம் தான்.

பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் போனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கையேட்டின் உதவி கொண்டு வடிவமைக்கின்றனர். ஆனால் சிலர் பணத்தை சேமிக்க என்று கூறி பேட்டரி அதிகமாக வெப்பம் ஏறினால் சர்க்யூட்டை செயல் இழக்கம் செய்யும் fuseஐ பொருத்துவதில்லை. எனவே இரவு முழுவதும் சார்ஜில் போனை வைப்பவர்களுக்கு ஆபத்தில் முடியும்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s