– AF-50
கொழும்பு: நாட்டின் சில பாகங்களில் இன்று மாலை ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டிருக்கிறது. எனினும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் 15ம் திகதி வெள்ளிக்கிழமை நோன்பைத் தொடருமாறு அறிவித்துள்ளது. ஏற்கனவே ACJU உறுப்பினர்களுக்கிடையே பிறை கருத்து முரண்பாடுகள் ரமழான் ஆரம்பத்திலிருந்து இருந்துவந்த நிலையில், இப்பிறை விவகாரத்தில் மோசடி இடம்பெற்றிருப்பதாக பிறை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.