WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி பிரதேசத்திலிருந்து சவூதி அரேபிய நாட்டின் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் தஃவா அமைப்பான லஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசத்திலிருந்து சவூதி அரேபிய நாட்டின் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மௌலவி அல்ஹாபிழ் எஸ்.முபாறக் (பலாஹி),மௌலவி ஆர்.சனூஸ் (மனாரி) ஆகியோரை கௌரவித்து பாராட்டி வழி அனுப்பும் நிகழ்வு 28 நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மஃஹதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி வளாகத்தினுள் இடம்பெற்றது.

  • காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஐந்தாவது சான்றிதழ் வழங்கும் விழாவும்,கௌரவிப்பு நிகழ்வும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 06.45 மணியளவில் காத்தான்குடி தாருல் அர்கம் இஸ்லாமிய அறிவூட்டல் மையத்தில் இடம்பெறவுள்ளது.

  • காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியில் கணித விஞ்ஞானப் பிரிவு தொடக்கி வைப்பும், புதிய மாணவர்கள் அனுமதியும்

    – எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரி “மார்க்கப் பின்புலம் கொண்ட துறைசார் அறிஞர் சமூக உருவாக்கம்” என்ற தூரநோக்கோடு கடந்த 2017 ஆம் ஆண்டு உயர் தரப் பிரிவை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. சுமார் 75 மாணவர்கள் உள்வாரியாகவும் 200 மாணவர்கள் வெளிவாரியாகவும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • “ஆயுத விவகார குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் விடுதலைப் புலிகளிடம் தீவிர விசாரணை அவசியம்” – ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

    முஸ்லிம்கள் ஆயுதம் வைத்திருப்பதாகவும், எனக்கும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் அதனுடன் தொடர்பு இருப்பதாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சு உரிய விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதை வரவேற்பதாகவும், குற்றச்சாட்டு முன்வைத்த புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் குறித்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி நாட்டுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • பெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு

    22.08.2018 புதன்கிழமை காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரினால் கடற்கரை அன்வர் பள்ளிவாயல் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெருநாள் திடல் தொழுகைக்காக வருகை தரவுள்ள சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் காலை 6.15 மணிக்கு பெருநாள் தொழுகைக்காக வருகை தரவுள்ள நீங்கள் கீழுள்ள ஒழுங்கு விதிகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

  • புவி றஹ்மதுழ்ழாஹ் கல்வியாளர் இல்லம்’ தேசிய ரீதியில் நடாத்தவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2018 இல் சித்தியடையும் மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் திட்டம்

    அன்பினிய பெற்றோர்களே.. ஆசிரியப் பெருந்தகைகளே.. மாணவ மணிகளே..! நாடளாவிய ரீதியில் நடைபெற்று முடிந்துள்ள இவ்வருடத்திற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றி அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கமைவாக 70 புள்ளிகளையும், அதற்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்று சித்தியடையும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளைப் பாராட்டி அவர்களுக்கான கண்கவரும் சான்றிதழ்களை வழங்கும் பாரிய திட்டமொன்றினை இவ்வருடத்திலிருந்து நான் ஆரம்பிக்கவுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் உங்களின் கவனத்திற்கு அறியத்தருகின்றேன்.

  • ஒவ்வொரு வருடமும் 200 வைத்தியர்கள் காணாமல் போகின்றனர்

    இலங்கை அரசு ஒவ்வொரு வருடமும் 1200 வைத்தியர்களை உருவாக்குகின்றபோதிலும்,அவர்களுள் 200 பேர் வெளிநாடுகளுக்கும் தனியார் வைத்தியசாலைகளுக்கும் சென்று விடுகின்றனர்.மீதி வைத்தியர்களை நாட்டில் உள்ள அணைத்து வைத்தியசாலைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து மிகவும் சிரமத்தின் மத்தியில் சிறந்த சேவையை வழங்கி வருகிறோம் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் கூறினார்.

  • வட்ஸ் ஆப் வழியாக உயிர் குடிக்கும் மோமோ விளையாட்டு!

    – SHM லண்டன்: ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு அபாயம் செல்போன் வடிவில் நம்மை துளைத்தெடுக்கிறது. முன்பு ப்ளூவேல். இப்போது மோமோ. ப்ளூவேல் போலத்தான் இதுவும் ஒரு விளையாட்டு. ஜப்பான் நாட்டில் உருவாக்கியதாக கூறப்படும் ‘மோமோ சேலஞ்ச்’ எனப்படும் ஒன்லைன் விளையாட்டு. ப்ளூவேல் என்பது நாம் பயன் படுத்தும் ஒரு தனி அப்ளிகேஷன். ஒன்லைன் தளத்திற்கு சென்று தான் விளையாட வேண்டும். ஆனால் இந்த மோமோ சேலஞ்ச் வாட்ஸ் ஆப் மூலம் விளையாடப்படுகிறது. இது ஒரு உயிர் குடிக்கும…

  • ஆகஸ்ட் 20ம் திகதி திங்கட்கிழமை அரபா தினமாக சவுதி அறிவிப்பு

    – MJ றியாத்: துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறை 11ம் திகதி சனிக்கிழமை மாலை சவுதி அரேபியாவில் தென்பட்டதையடுத்து, துல்ஹஜ் மாதம் 12ம் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது. இதன்படி எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை அறபா தினமாகவும், 21ம் திகதி செவ்வாய்க்கிழமை ஈதுல் அல்ஹா – ஹஜ் பெருநாள் தினமாகவும் சவுதி அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

  • இடி அமீன்

    தேசிய குத்துச்சண்டை பட்டம் வென்ற இடி அமீன் 1971ஆம் ஆண்டு, மில்டன் ஒபோடேவை ஆட்சியில் இருந்து அகற்றி அதிகாரத்தை கைப்பற்றினார். தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில், இதற்கு முன் கேள்விப்பட்டிராத வகையில் கொடூரமாக நடந்துக் கொண்ட இடி அமீன், நவீன வரலாற்றின் கொடுங்கோல் ஆட்சியாளர்களில் முன்னணியில் இருக்கிறார்.

  • முஸ்லிம் விவாகச் சீர்திருத்தம்: ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் கருத்தரங்கு இன்று

    – எம்.எஸ்.எம்.ஸாகிர் கொழும்பு: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் முஸ்லிம் விவாக – விவாகரத்து சீர்திருத்தம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (08) புதன்கிழமை இரவு 6.45  மணிக்கு (மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து) கொழும்பு – 10 ஸ்ரீசங்கராஜ மாவத்தை, அல் – ஹிதாயா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

  • உலகின் காலியான விமான நிலையத்தை இந்தியா வசம் ஒப்படைக்கிறது இலங்கை!

    – SHM உலகிலேயே காலியான விமான நிலையயமான ஹம்பந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த வரைவுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

←Previous Page
1 … 89 90 91 92 93 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar