உலகின் காலியான விமான நிலையத்தை இந்தியா வசம் ஒப்படைக்கிறது இலங்கை!

mattala– SHM

உலகிலேயே காலியான விமான நிலையயமான ஹம்பந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த வரைவுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

மத்தள ராஜபக்ச விமான நிலையம் கொழும்பிலிருந்து 241 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹம்பந்தோட்டையில் உள்ளது. 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ஹம்பந்தோட்டை விமானநிலையம் மே மாதம் போக்குவரத்தை நிறுத்தியது. இதனாலோ என்னவோ உலகிலேயே காலியான விமான நிலையமாகச் சித்திரிக்கப்படுகிறது.

இந்தியாவுடன் இணைந்து 241 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் மீண்டும் ஹம்பந்தோட்டை விமான நிலையம் இயக்கப்படும் எனச் சிறிசேனா அரசு அறிவித்துள்ளது. மறுகட்டமைப்பு செய்வதற்கான வரைவுத் திட்டம் குறித்து இந்திய அரசிடம் இலங்கை பேசியுள்ளது.

mattalaairport_closed

yourkattankudy/mattala airport

விமான நிலைய கட்டுப்பாடு, போக்குவரத்து உரிமை மற்றும் வர்த்தகச் செயல்பாடுகளை இலங்கை அரசே வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 1 பில்லியன் பயணிகளின் போக்குவரத்துக்கு லாகவமான இந்த விமான நிலையத்தில் 5 பில்லியனாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.2028 ஆம் ஆண்டுக்குள் 50000 டன் சரக்குகளைக் கையாகவும், விமானப்போக்குவரத்து நடவடிக்கைகளை உயர்த்தவும் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s