திடீர் ஆட்சி மாற்றம் ஏன் ? இது சாத்தியப்படுமா?

mahinda-maithriகொழும்பு: பிரதமர் பதவியிலிருந்து ரணில் ராஜினமா செய்திருக்க வேண்டும். அல்லது ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக ஜனாதிபதியினால் அறிவிப்பு செய்திருக்க வேண்டும். எதுவுமில்லாமல் மஹிந்த ராஜபக்ச பிரதம மந்திரியாக திடீரென நியமிக்கப்பட்ட அறிவிப்பானது நாட்டில் திடீர் அரசியல் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதவிப்பிரமாணம் அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தான்தான் இன்னும் பிரதமர் என்றும், மகிந்தவின் நியமனம் சட்டத்துக்கு முறணானது என்றும் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.

ஆனாலும் சட்டம் தெரியாமலா ஜனாதிபதி இந்த நியமனத்தினை வழங்கினார் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இது ஜனாதிபதியின் சர்வாதிகார போக்கினை காட்டுகின்றது.

அன்று ரணிலை நம்பி மகிந்தவுக்கு கழுத்தறுப்பு செய்துவிட்டு ரணிலின் உதவியுடன் ஜனாதிபதி பதவியில் அமர்ந்த மைத்ரிபால சிரிசேனா அவர்கள், இன்று மகிந்தவை நம்பி ரணிலுக்கு கழுத்தறுப்பு செய்திருக்கின்றார்.

சிங்கள மக்களின் செல்வாக்குகள் ராஜபக்ச குடும்பத்துக்கு இருப்பதனால் மாகாணசபை தேர்தல்களை நடாத்துவதில் நல்லாட்சி அரசுக்கு தயக்கம் இருந்தது.

இதே நிலைமை தொடர்ந்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தல்களை எதிர்கொள்வது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். அதனால் கோட்டபாய, மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால ஆகியோரை கொலை செய்தால் இலகுவில் சிங்கள மக்களின் செல்வாக்கினை ரணிலின் பக்கம் திருப்ப முடியும் என்ற குரல் பதிவு அரசியல் மட்டத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

mahinda
yourkattankudy/mahinda-politics

அதனால் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னால் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா அவர்கள் இதனை கூறினார் என்ற ரீதியில் பல மட்டத்தில் விசாரணைகள் நடைபெற்றது.

இந்த விவகாரத்தில் ரணில் மீது ஏற்ப்பட்ட சந்தேகமே இன்று மகிந்தவை பிரதமராக்கி இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.

எது எப்படி இருப்பினும் பாராளுமன்றத்தில் தனது அறுதி பெரும்பான்மையினை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்.

அவ்வாறு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள உறுப்பினர்களை விலைக்கு வாங்கப்படலாம். இது அரசியலில் சாதாரண விடயமாகும்.

அத்துடன் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவுகள் இன்றியும் ஆட்சி அமைப்பது சாத்தியமற்ற விடயமாகும். எது எப்படியோ பொறுத்திருந்து பார்ப்போம்.

  • முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s