indiaடில்லி: இந்திய ராணுவத்தின் முக்கியத் தரவுகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புடன் பகிர்ந்து கொண்டதாக, உத்தரப் பிரதேச மாநில  சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் அவரை இந்தியாவுக்கு அனுப்பியிருக்க வாய்ப்பு உண்டு என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராணுவத்தில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் அவரது பெயரை ராணுவம் வெளியிடவில்லை. அவர் அடிக்கடி பாகிஸ்தானில் இருப்பவர்களுடன் தொலைபேசியில் பேசியதால் ராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவு அவர் மீது சந்தேகம் கொண்டு கண்காணிக்கப்பட்ட பின்னர் இந்நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.